கோலா விளம்பரத்தில் நடித்துவிட்டு, அப்புறம் ஏன் கத்தில அதை எதிர்த்தீங்க – ரசிகரின் கேள்விக்கு அன்றே விஜய் அளித்த பதில்.

0
37215
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் இதை சமீபகாலமாகவே இவரது படங்களில் அரசை எதிர்த்து பல்வேறு வசனங்கள் இருந்ததால் இவரது படங்கள் வெளியாகும்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது இந்த பிரச்சனை தற்போது ஆரம்பித்தது கிடையாது தலைவா படத்தின் போதே நடிகர் விஜயின் படங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்கி விட்டது.

-விளம்பரம்-

தலைவா படத்திற்கு பின்னர்தான் விஜய்யின் படங்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வந்தது சமீபத்தில் வெளியான திகில் படம் வரை இந்த பிரச்சினைகள் ஓய்ந்த பாடில்லை அதிலும் கத்தி படத்தில் விஜய் பேசிய வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது அதிலும் குறிப்பாக கத்தி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசிய வசனங்கள் பல்வேறு அரசியலை விமர்சித்த இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் கத்தி படம் வெளியான பின்னர் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் விஜயிடம் கொக்கக் கோலா விளம்பரத்தில் நடித்தது குறித்து கேட்ட கேள்வியின் ஸ்க்ரீன் ஷாட் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது அந்த பதிவில் விஜயிடம் அந்த ரசிகர் இதற்கு முன்னால் கொக்கக் கோலா விளம்பரத்தில் நடித்து விட்டு தற்போது கத்தி படத்தில் அதற்கு எதிராக பேசுகிறீர்களே இதற்குப் பெயர் என்ன என்று கேட்கிறார்

அதற்கு பதிலளித்துள்ள விஜய் அதை நான் இப்போது செய்வது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் என்னுடைய தவறுகளை திருத்திக் கொள்கிறேன் சாதாரண மனுஷன் தான் நானும் என்று கூறியுள்ளார் அதேபோல அந்த பொருட்களை இனி நான் விளம்பரப் படுத்த மாட்டேன். கத்தி படத்தின் கதையை நான் கேட்ட போதே எனக்கு இது தோன்றிவிட்டது. எனவே ஜீவா கதாபாத்திரம் மூலமாக நான் அதை சொன்னேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், ஆம் நானும் இது போன்ற விளம்பரங்களில் இதற்கு முன்னால் நடித்தவர்தான். இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய பிரபலங்களான சச்சின்,அமீர்கான் போன்றவர்கள் கூட இதற்கு தூதுவர்களாக இருந்தவர்கள்தான். ஆனால் அரசியல் பிரபலங்களை கேள்வி கேட்க ஆரம்பிக்கும் முதல் ஆளாக நான் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ பல்வேறு பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Advertisement