பொன்னியின் செல்வனில் மட்டுமல்ல அப்போதே விளம்பரத்தில் இந்த கெட்டப்பில் நடித்துள்ள விக்ரம்.

0
1070
Vikram
- Advertisement -

சினிமாவில் எந்த ஒருபின்னணி இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விக்ரம். தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக திகழ்வது நடிகர் விக்ரம் தான். கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”.

-விளம்பரம்-

நடிகர் விக்ரம் அவர்கள் இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சீயான் 60 படத்தில் விக்ரம் உடன் இணைந்து அவரின் மகன் துருவ் விக்ரம் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விக்ரம் நடித்த விளம்பரத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. விக்ரம் அவர்கள் சினிமாவில் படங்களில் நடிப்பதற்கு முன்பு பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் இவர் சோழ என்ற டீ தூள் விளம்பர படத்தில் சோழன் கெட்டப்பில் நடித்துள்ளார்.

அதன் புகைப்படம் தற்போது இணைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம். மேலும், விக்ரம் அவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் சோழனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement