விக்ரம், ஜெயிலரில் கலக்கிய ஜபரின் காதலியை பார்த்துள்ளீர்களா ? எப்படி இருக்கு பாருங்க ஜோடி.

0
2324
Jaffer
- Advertisement -

ரஜினி குறித்து ஜெயிலர் பட நடிகர் ஜாபர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஜெயிலர் படம் குறித்த செய்திகள் தான் உலா வந்து கொண்டிருக்கிறது. ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருந்த படம் ஜெயிலர். இந்த படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை ஃபேன் இந்தியா படமாக்க ஹிந்தியில் ஜாக்கி ஷெரப், மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் சிவராஜ்குமார், தெலுங்கில் சுனில் என்று பல நட்சத்திர பட்டாளங்களை வைத்து இந்த படத்தை மாஸாக எடுத்திருக்கிறார் நெல்சன். தமிழ் சினிமா வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையை ஜெயிலர் படம் படைத்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அறிவித்திருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

அதோடு இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கும் மாஸ் ஹீரோக்கள் உடன் துணை வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் பற்றி தற்போது சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சிவராஜ் குமார் உடன் இருக்கும் அடியாட்களில் ஒருவராக நடித்திருப்பவர் ஜாபர். இவர் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் ரவுடியாக நடித்திருக்கிறார். இவர் விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.

ஜாபர் திரைப்பயணம்:

அதற்குப் பிறகு விக்னேஷ் சிவன் தான் இவரை சினிமா உலகில் அறிமுகம் செய்தார். இவர் பாவ கதைகள் என்ற வெப் தொடரில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்த விக்ரம் படத்தில் ஜாபர் நடித்திருந்தார். பின் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திலும் ஜாஃபர் நடித்திருந்தார். தற்போது ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஜாபர் அளித்த பேட்டி:

இவர் உயரம் குறைவு என்பதாலும் தனக்குள் பல திறமைகளை வைத்திருக்கிறார். இந்த நிலையில் ஜெயிலர் படம் வெற்றி அடைந்ததை ஒட்டி ஜாஃபர் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் ரஜினி குறித்து கூறியிருந்தது, ரஜினி சார் என்னை பார்த்து அடிக்கடி எப்ப கல்யாணம் பண்ணுவ என்று கேட்டுக் கொண்டிருப்பார். பின் நான் என்னுடைய கேர்ள் பிரண்டு போட்டோ காண்பித்தவுடன் உங்களுடைய பேர் நன்றாக இருக்கிறது என்று பாராட்டி இருந்தார்.

ரஜினி குறித்து சொன்னது:

பின் ஒரு நாள் நான் என்னுடைய கேர்ள் பிரண்டு உடனே ரஜினி சாரை சந்திக்கப் போனேன். என்னுடைய கேர்ள் பிரண்டை ரஜினி சாரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். அவரும் அவரைப் பார்த்து உட்காருமா, காபி சாப்பிடுறியா என்று கேட்டார். உடனே என்னுடைய கேர்ள் பிரண்டுக்கு ஒரே சந்தோஷம். அவள் ஆச்சரியத்தில் அவருடைய நண்பர்களிடம் எல்லாம் கூறியிருந்தார். பின் ரஜினி சார் என்னை பார்த்து ஜென்டில்மேன் என்று சொன்னார். அதை அவர் என்னுடைய நண்பர்களுடன் சொல்லி கிண்டல் கேலி செய்திருந்தார் என்று நகைச்சுவையாக பேசி இருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement