விஜய் டிவியில் இருந்து வெளியேறியது குறித்து முதன்முறையாக டிடி அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு இவர் தன்னுடைய பேச்சாலும், திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர்.அதோடு இவர் 21 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார்.
இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. இதனிடையே டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் டிடிக்கும் அவரது கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பிறகுதான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.
டிடி குறித்த தகவல்:
இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் காபி வித் காதல். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, சில ஆண்டுகளாகவே டிடி விஜய் டிவி பக்கமே வருவதில்லை.
டிடி அளித்த பேட்டி:
பொதுவாகவே விஜய் டிவி நிகழ்ச்சிகள் என்றாலே டிடி இருப்பார். ஆனால், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை. அதற்கு பதில் இவர் இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகளை தான் தொகுத்து வழங்குகிறார். இது குறித்து பலருமே கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டிடி விஜய் டிவியில் இருந்து விலகிய காரணம் குறித்து பேசி இருக்கிறார்.
அனிரூத்திடம் கேட்க சொன்ன கேள்வி :
இதுகுறித்து பேசிய அவர் ‘ஒருமுறை அனிருத் பங்கேற்ற வேட்டியில் அனிருத்திடம் இந்த கேள்வியை கேளுங்கள் கேளுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள் ஆனால் கடைசி வரைக்கும் நான் அதை கேட்கவே இல்லை இதனால் அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் கூட என் மீது கோபமடைந்து திட்டினார். இறுதியில் அனிருத்திடம் நாங்கள் எவ்வளவோ சொன்னோம் அந்த கேள்வியை கேட்க சொல்லி ஆனால் அவர்தான் கேட்கவில்லை என்று சொன்னார்கள் அதற்கு அவர் அதுதான் டிடி என்று கூறினார் ஒரு சில விஷயங்களை கேட்கக் கூடாது என்றால் அதை நான் கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
விஜய் டிவியில் வெளியேற காரணம்:
திக நேரம் படபிடிப்பு நேரத்தில் நின்று கொண்டிருந்ததால் தான் எனக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டது.அதோட விஜய் டிவியில் நான் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். அப்போதெல்லாம் பல மணி நேரங்கள் சூட்டிங் நடந்து கொண்டே இருக்கும். முழுக்க தொகுப்பாளர்கள் நிற்க வேண்டும். அது எனக்கு மட்டுமே இல்லை. தொகுப்பாளராக இருந்தாலே அனைவருக்கும் இந்த நிலைமை தான். ஒரு கட்டத்தில் என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் போனதால் எனக்கு நிகழ்ச்சிகள்