பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருதை வழங்கிய திருமாவளவன் – மேடையில் தெறிக்கவிட்ட பிரகாஷ் ராஜின் பேச்சு

0
267
- Advertisement -

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய விழாவில் பிரகாஷ்ராஜ் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருடம் வருடம் தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறு சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறார்கள். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் இந்த விருது மே 25ஆம் தேதி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பிரகாஷ்ராஜுக்கு மட்டுமில்லாமல் பல பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இதில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. பின் விழாவில் பிரகாஷ்ராஜ், என்னுடையது திருமால்வளவன் போல நீண்ட கால கொள்கை எல்லாம் கிடையாது. இருந்தாலுமே, பலரும் ஏன் பேசுகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். உடலில் ஒரு சின்ன காயம் ஏற்பட்டாலும் நாம் சும்மா இருந்தால் அந்த வலி தானாகவே குறைந்துவிடும். ஆனால், ஒரு சமுதாயத்துக்கு, ஒரு நாட்டுக்கு காயம் ஏற்பட்டால் நாம் பேசாமல் இருந்தால் அது அதிகமாகிவிடும்.

- Advertisement -

பிரகாஷ்ராஜ் சொன்னது:

ஒரு கலைஞன் கோழையானால் ஒரு சமுதாயமே கோழையாகி விடும். இது என்னுடைய கடமை. இந்த புரிதல் என்னுடைய திறமையால் எனக்கு வந்தது கிடையாது. லங்கேஷ், அம்பேத்கர், காந்தி, பாரதி, மார்க்ஸ் போன்றோரை படித்ததால் தான் எனக்கு வந்தது. கடந்த பத்தாண்டுகளாக தான் மோடியை எதிர்த்து கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் அவரை மன்னர் என்று சொல்ல முடியாது. அவர் தெய்வக் குழந்தை ஆகிவிட்டார்.

மோடி குறித்து சொன்னது:

நாட்டுக்கு அவரால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் திட்ட முடியாது. தெய்வம் சோதிக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மறைந்த கௌரி லங்கேஷ் உடைய தந்தை லங்கேஷ் தான் என்னுடைய ஆசான். அவர் தான் எங்களை செதுக்கியவர். அம்பேத்கர் அரசியலமைப்பை எழுதாமல் இருந்திருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. அவருடைய சிந்தனைகள் பசியால், வறுமையால் பிறந்தது கிடையாது. அவமானத்தில் பிறந்தது என்று உணர்ச்சிபூர்வமாக பேசியிருக்கிறார்.

-விளம்பரம்-

விருது வாங்கியவர்கள்:

இதுவரை இந்த விருதை முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர் மாண்புமிகு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் சித்தாரமையா, ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை. பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

பிரகாஷ்ராஜ் குறித்த தகவல்:

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர். பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார். அதிலும், சமீப காலமாக பிரகாஷ் ராஜ் அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு வருகிறார். அதோடு இவர் அரசியலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement