கோப்ரா படம் பார்க்க வந்த விக்ரம் காலில் விழுந்து போட்டோ எடுப்பதற்கு அனுமதி கேட்ட ரசிகர் கண்டுக்காமல் சென்று விக்ரம். தென்னிந்தியா சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் விக்ரம். . நடிப்பில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் தன்னுடைய திறமையால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து உள்ளார். நடிகர் விக்ரம் அவர்கள் தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, பிலிம்பேர் விருது எனப் பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் என்றே சொல்லலாம்
இரண்டு ஆண்டு முன் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து விக்ரமும் விக்ரம் மகன் துருவ் விக்ரம் இனைந்து நடித்து வெளியான படம தான் மஹான். தந்தையும் மகனும் இந்த படத்தில் நடிப்பின் உட்சத்திற்கே சென்று விட்டனர் என்று சொல்லாம். அந்த அளவு மக்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து இன்று வெளியாகிய படம் “கோப்ரா”. தற்போது நடிகர் விக்ரம் அவர்கள் இந்த கோப்ரா படத்தில் ஒரு மிகப் பெரிய சாதனை செய்து உள்ளார். அதாவது நடிகர் விக்ரம் இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் வருகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதற்கு முன் பல கெட்டப் போட்ட படம் :
தமிழ் சினிமா உலகில் சிவாஜி கணேசன், கமலஹாசன் ஆகியோரின் சாதனைகளை( கெட்டப்) மிஞ்சும் வகையில் விக்ரம் இந்த படத்தில் நடித்து உள்ளார் என்று கூறப்படுகிறது. 1964 ஆம் ஆண்டு வெளிவந்த நவராத்திரி படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் ஒன்பது விதமான கெட்டப்புகளில் நடித்து இருப்பார். அதே போல 2008 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தசாவதாரம் படத்தில் கமலஹாசன் அவர்கள் பத்து விதமான கெட்டப்பில் தோன்றி இருப்பார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரம் அவர்கள் கோப்ரா படத்தில் 20 விதமான கெட்டப்புகளில் நடித்து உள்ளார் என்று கூறபடுகிறது.
கோப்ரா படம் இன்று வெளீயிடு :
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் பாஸ்டர் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகிஇருந்தது. அதில் விக்ரம் ஒரு கண்ணாடி முன்பு நின்று 7 கெட்டப்புகளுடன் தோன்றி மாஸ் காட்டி இருந்தார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். ஹரிஸ் கண்ணன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இப்படி ஒரு நிலையில் பல வித போரட்டங்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த படம் இன்று திரைக்கு வந்து இருக்கிறது.இன்று வெளியான கோப்ரா படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது படம் பார்த்த அனைத்து ரசிகர்களும் நல்லவிதமான விமர்சனங்களே தந்து வருகின்றனர்.
போட்டா எடுக்க டைம் இல்ல கோப்ரா நடிகைகள் :
இந்நிலையில் இந்த படத்தில் நடித்த மூன்று ஹீரோயின்கள், விக்ரம், விக்ரமின் மகன், போன்று இந்த படத்தில் நடித்தவர்கள் படம் பார்க்க திரையரங்கு வந்தபோது திரையரங்கில் இரவு முழுவதும் படத்துக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் தன்னுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டிருக்கிறார் அதற்கு மூன்று ஹீரோயின்களும் எங்களுக்கு நேரமில்லை என்று கூறிவிட்டு வேகமாக காரில் ஏற்றி சென்று விட்டார்களாம். கோபமடைந்த ரசிகர் ஒரு படத்தில் நடித்துவிட்டு இவ்வளவு சீன் போடுவது ஆகாது தியேட்டரில் ஆளே இல்லாத போது தான் போட்டோ எடுப்பதற்காக கேட்டிருந்தேன் ஒரு நிமிடம் நின்னு போட்டோ எடுத்து விட்டு போயிருந்தால் என்ன என்று ஆதங்கமாக பேட்டி கொடுத்தார்.
விக்ரம் காலில் விழுந்த ரசிகர் :
மேலும் அந்த ரசிகரின் நண்பர் விக்ரம் சார் அவர்களின் காலில் விழுந்து போட்டோ எடுத்து கொள்ளுமாறு கேட்டான் அவர் கண்டுக்காமல் அப்படியே போய்விட்டார் இன்று கூறினார். மேலும் அந்த நபர் நான் படத்தைப் பற்றி குறை கூறவில்லை இருந்தாலும் போட்டோகிராபர், மீடியா, பிரஸ் போன்ற நபர்கள் இருக்கும் பொழுது அவர்கள் சென்றிருந்தால் கூட எனக்கு ஒன்றும் தெரிந்து இருக்காது. ஆளே இல்லாத பொழுது அவர்கள் சென்றது தான் வருத்தமாக உள்ளது மேலும் நான் இனிமேல் தமிழ் சினிமா பார்க்க போவதில்லை என்றும் நான் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற சினிமாவை பார்த்துக்கொள்கிறேன் ஐயோ சாமி இனிமேல் எனக்கு தமிழ் சினிமாவை வேண்டாம் என அந்த இரு ரசிகர்களும் தங்களது கோபத்தை வெளி காட்டினார்கள்.