ஸ்லீவ்லெஸ், கர்லி முடி – ரம்யா பாண்டியனை போல அம்மன் லுக் போட்டோ ஷூட் நடத்திய கண்மணி.

0
1342
kanmani
- Advertisement -

சமீப காலமாகவே சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக செய்திவாசிப்பாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். தொலைக்காட்சி பொறுத்த வரை எப்போதும் ஒரு சில தொகுப்பாளனிகளுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். அந்த வகையில் தற்போது சன் டிவி செய்தி வாசிப்பாளராக கலக்கி கொண்டு இருப்பவர் கண்மணி. தூர்தர்ஷன் செய்திகளுக்குப் பிறகு சன் டிவி செய்திகளுக்குத் தான் மக்கள் மத்தியில் மவுசு அதிகம் இருக்கிறது. பல ஆண்டு காலமாக சன் டிவியில் நியூஸ் ஒளிபரப்பப்படுகிறது. செய்தி வாசிப்பாளராக ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி வைத்திருப்பவர் நியூஸ் ரீடர் கண்மணி. இவர் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

-விளம்பரம்-

தற்போது இவர் சன் டிவியில் நியூஸ் ரீடர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் அணிந்து வரும் சேலை, ஹேர் ஸ்டைலுக்கு என்றே பெண் ரசிகைகளும் உள்ளார்கள். இந்த துறைக்கு வந்து கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பல சீரியல், பட வாய்ப்புகள் வந்தும் இவர் செய்தி வாசிப்பதை தான் அதிக ஆர்வத்துடன் செய்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கண்மணி சேகர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படம், வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார்.

- Advertisement -

சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் கண்மணி :

இதற்காகவே இவரை சோசியல் மீடியாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இவர் வெளியிடும் புகை படங்கள் எல்லாமே பல்லாயிரக்கணக்கான லைக்ஸ்குகளை குவிகிறது. இந்த நிலையில் கண்மணி சேகர் அவர்கள் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அப்படி என்ன புகைப்படம் என்று பார்த்தால், கண்மணி அவர்கள் அம்மன் கடவுள் போல வேடமணிந்து போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.

கண்மணி-ரம்யா பாண்டியன் அம்மன் புகைப்படம்:

அந்த போட்டோவை தான் பகிர்ந்திருக்கிறார். முதலில் இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் ரம்யா பாண்டியன் என நினைத்து விட்டதாக கூறி இருந்தார்கள். ஏன் என்றால் சமீபத்தில் தான் நடிகை ரம்யா பாண்டியன் அம்மன் வேடத்தில் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். தற்போது கண்மணி அம்மன் புகைப்படம் பார்க்கும்போது ரம்யா பாண்டியனை போலவே இருக்கிறது. கண்மணியின் இந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக ரம்யா பாண்டியன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

ரம்யா பாண்டியன் திரைப்பயணம்:

இவர் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி பட்டாஸ் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் ஜோக்கர், ஆண்தேவதை போன்ற சில படங்களில் நடித்தார். ஆனால், இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்பதால் அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

ரம்யா பாண்டியன் போட்டோ ஷூட்:

பின் இந்த நிகழ்ச்சி மூலம் இவர் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் இவர் பின் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் அவர்கள் கடைசி வரை தாக்குபிடித்து 100 நாட்கள் வரை இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருவார். சமீபத்தில் கூட ரம்யா பாண்டியன் அம்மன் கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். தற்போது இவர் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement