பின் வாங்கிய ஸ்டண்ட் மேன், துணிச்சலாக செய்ததால் விக்ரமுக்கு நரம்பில் ஏற்பட்ட சிக்கல் – கோப்ரா இயக்குனர் பேட்டி.

0
764
cobra
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விக்ரம். எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக திகழ்வது நடிகர் விக்ரம் தான். கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”. நடிகர் விக்ரம் அவர்கள் இந்த கோப்ரா படத்தில் ஒரு மிகப் பெரிய சாதனை செய்து உள்ளார். அதாவது நடிகர் விக்ரம் இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.

-விளம்பரம்-

இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ் எஸ் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வரப்போகிறது. இந்நிலையில் நடிகர் விக்ரம் அவர்கள் கோப்ரா படத்திற்காக தன்னுடைய உயிரை பணயம் வைத்து உள்ளார். பொதுவாகவே நடிகர் விக்ரம் தனது படங்களுக்காக பிற நடிகர்களை விட ஒரு படி மேலாகவே தனது உழைப்பை கொடுப்பார். ஒருபோதும் விக்ரம் படத்தின் காட்சிக்காக ரிஸ்க் எடுப்பதற்கு யோசிப்பது இல்லை.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விக்ரம் தன் உயிரை பணயம் வைத்து படத்தில் நடித்த காட்சி குறித்து சமீபத்தில் இயக்குநர் அஜய் ஞானமுத்து பேட்டி அளித்து இருந்தார். நீருக்கடியில் எடுத்த ஒரு காட்சியின் படப்பிடிப்பின் போது விக்ரம் அவர்கள் தனது உயிரைப் பணயம் வைத்ததாக கூறி உள்ளார். ஒரு துணியால் வாயை மூடிக்கொண்டு, அவரது கால்களையும் கைகளையும் கட்டியிருந்த காட்சியை படமாக்கியுள்ளார். அந்த காட்சி நீருக்கடியில் விக்ரமை ஒரு கயிற்றில் தலைகீழாக தொங்க விட்டு எடுக்கப்பட்டது. இந்த ஆபத்தான ஷாட்டுக்கு அஜய் ஒரு ஸ்டண்ட் மேனை டூப் செய்ய வந்திருந்தாராம்.

ஆனால், ஸ்டண்ட் நபரால் கூட நீண்ட நேரம் மூச்சு விட முடியவில்லை. மேலும்,விக்ரம் தானாகவே அந்த காட்சியை படமாக்க முடிவு செய்தார். பின் அஜய் அந்த காட்சியை மாற்றியமைப்பதாக கூறினார். ஆனால், விக்ரம் கண்டிப்பாக இந்த காட்சியை ஷூட் செய்ய வேண்டும் என்று கூறினார். இறுதியில் அந்த காட்சி நன்றாக வந்தது. அந்த காட்சி எடுக்கப்பட்ட பிறகு விக்ரமின் கண்கள் மற்றும் காதுகளில் தண்ணீர் நுழைந்ததால் நரம்புகளில் சிக்கல் ஏற்பட்டது. உடனே நடிகர் விக்ரமுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு அவர் அடுத்தடுத்த காட்சிகளையும் இடைவெளி இல்லாமல் நடிக்க தொடங்கினாராம்.

-விளம்பரம்-
Advertisement