பாடகராக துவங்கிய வாழ்க்கை, கேன்சர் பாதிப்பு – பிரபல சீரியல் நடிகர் கடந்து வந்த பாதை.

0
617
Sairam
- Advertisement -

கேன்சரால் பாதிக்கப்பட்டதை குறித்து மனம் திறந்து சீரியல் நடிகர் சாய்ராம் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் சாய்ராம். இவர் பல வருடங்களாக சின்னத்திரை சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடகர் ஆவார். இவர் சன் டிவி,விஜய் டிவி,ஜீ தமிழ் என பல சேனல்களில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் இவர் கடைசியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த நீதானே என் பொன்வசந்தம் என்ற தொடரில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் சாய்ராம் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், என்னுடைய கேரியர் பாடகர் ஆக தான் தொடங்கியது. ஒரு காலத்தில் கச்சேரியில் ரொம்ப பிசியாக இருந்தேன். அப்போதெல்லாம் டிவியில் நடிக்கும் ஆர்வம் எல்லாம் கிடையாது. நடிகர் பாஸ்கி என்னுடைய பெஸ்ட் பிரண்ட்.

- Advertisement -

சாய்ராம் பேட்டி:

அவர் மூலமாக தான் எனக்கு சீரியல் வாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் எனக்காக ஷூட்டிங் ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாம் வைப்பார்கள். ஏன்னா, எனக்கு அன்று மட்டும் தான் லீவு. அப்படியே சீரியல், கச்சேரி என்று பிசியாக வேலை செய்து கொண்டிருந்தேன். அதுவரைக்கும் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிக் கொண்டுதான் இருந்தேன். விடாமல் தொடர்ந்து நிறைய சீரியல் நடித்திருந்தேன். அப்போதுதான் மெயின் காமெடி ரோலில் திரு திரு மாயாண்டியின் ஒரு தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது.

சாய்ராம் சீரியல் வாய்ப்பு:

அந்த தொடர் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதை பார்த்துவிட்டு ஏவிஎமில் நடிக்க கூப்பிட்டார்கள். அப்படிதான் ஏவிஎம் தொடர்களில் நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. ஏவிஎம்மில் தொடர்ந்து சீரியல்கள் பண்ணினேன். மேலும், கே பாலச்சந்தர் சார் எனக்கு தெய்வ மாதிரி. அவருடைய இயக்கத்தில் எல்லாம் நான் நடிப்பேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதுவும் நடந்தது. நினைத்தாலே இனிக்கும் என்று அவரை வைத்து ஒரு தனியாஒரு ஷோ பண்ணினேன்.

-விளம்பரம்-

கேன்சர் குறித்து சொன்னது:

அவருடைய சீரியலில் நடித்ததும், அவரை வைத்து ஷோ பண்ணதும் சரி என் வாழ்க்கையில் ஆஸ்கர் விருதுக்கு நிகராக நான் நினைக்கிறேன். 2012 இல் என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப மோசமான காலம். அப்பதான் எனக்கு கணைய புற்றுநோய் இருக்கும் விஷயம் தெரிந்தது. என்னுடைய குடும்பம், நண்பர்கள் மருத்துவர்கள் எல்லோருமே கொடுத்த ஊக்கம் தான் இன்னைக்கு நான் நன்றாக இருக்கிறேன். அந்த சமயம் கிரியா யோகா ரெகுலராக பண்ணிக் கொண்டிருந்தேன். அதுவும் எனக்கு கொஞ்சம் ஆறுதலை கொடுத்தது. நான் இப்போ கேன்சர் சர்வைவர் தான்.

வாழ்க்கை பாடம் குறித்து சொன்னது:

சில வியாதி பெயர் சொன்னாலே மக்கள் பயப்படுற அளவுக்கு ஆகிட்டாங்க. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. சீக்கிரம் பிரச்சனை என்னன்னு தெரிந்துகொண்டால் போதும் சரியாக்கிவிடலாம். இந்த புற்றுநோயால் நான் 80 கிலோவில் இருந்து 40 கிலோ வந்துவிட்டேன். அதேபோல் நடிகை நித்யா என்னுடைய பிரண்ட். என்னுடைய தங்கையும் அவங்க கணவரும் சேர்ந்து நிறைய விளம்பர படங்கள் எடுக்கும் கம்பெனி நடத்திக் கொண்டிருந்தார்கள். சில சீரியல்களையும் அவங்க ப்ரொடியூஸ் பண்ணி இருந்தார்கள். அப்போதுதான் ஆவணப்படம் எப்படி இயக்கனும், விளம்பர படங்கள் எப்படி பண்ணனும் என்ற வித்தியாசம் தெரிந்து கொண்டேன். நண்பர்கள் ஃபேமிலி மூலமாக நான் மீண்டும் வந்து விட்டேன். இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement