நான் வருத்தப்பட்டது வருத்தப்பட்டது தான். அந்த வருத்தத்தை இனி தீர்க்க முடியாது – தனது காதல் குறித்து பேசிய மகாநதி சங்கர்

0
235
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் மகாநதி சங்கர். இவர் படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் தான் நடித்து வருகிறார். இவர் வில்லனாக முதலில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த மகாநதி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பின்னரே இவருடைய பெயர் மகாநதி சங்கர் என்று வந்தது. ஆனால், இதற்கு முன் இவர் அம்மா வந்தாச்சு என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது மகாநதி படம் தான்.

-விளம்பரம்-

அதை தொடர்ந்து இவர் பல படங்களில் வில்லன், நகைச்சுவை போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரை தல என்று அழைத்ததே இவர் தான். அதற்குப் பின் தான் அஜித்தை ரசிகர்கள் தல என அழைக்க ஆரம்பித்தார்கள். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவந்திருந்த குளுகுளு என்ற படத்தில் மகாநதி சங்கர் நடித்திருந்தார்.

- Advertisement -

மகாநதி சங்கர் திரைப்பயணம்:

இதனை தொடர்ந்தும் இவர் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித் திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் சில தொடர்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, நாதஸ்வரம், மாயா, நந்தினி போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் வானத்தைப்போல சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் மகாநதி சங்கர் கூறியது, 1986ல் சாதாரண சண்டைக் கலைஞராக தான் சினிமாவில் அறிமுகமானேன். இன்று வரை என் பயணம் சினிமாவில் தொடர்கிறது. மகாநதிக்கு முன்பு, 7 ஆண்டுகள் சண்டைக் கலைஞராக தான் பணியாற்றினேன்.

மகாநதி சங்கர் பேட்டி:

அதை வைத்து தான், ‘ரிஸ்க் எடுப்பதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’ என்று கூறினேன். மகாநதியில் வாய்ப்பு கிடைத்ததற்கு காரணமான விக்ரம் தர்மா மாஸ்டருக்கு தான் நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். அவர் என்னை ஓகே செய்துவிட்டு பின்னர் சந்தான பாரதி சார் ஆபிஸிற்கு போனோம். அவருக்கும் பிடித்து விட்டது. அதன் பின் கமல் சாரிடம் அனுமதி வாங்க நேராக மகாநதி ஷூட்டிங் சென்றுவிட்டோம். அன்று தான் கமல் சாருக்கு பிறந்த நாள் வேறு. சார் என்னை அப்படியே பார்த்தார், ‘என்னை மாதிரி முடி வெட்டுங்க அவ்வளவு தான்’ என்று கூறி முடித்துவிட்டார். அப்புறம் அப்படியே நானும் இணைந்துவிட்டேன். நான் அப்போ 66 கிலோ இருந்தேன்.

-விளம்பரம்-

சினிமா பயணம்:

என்னை உடம்பை ஏற்றுமாறு தர்மா மாஸ்டர் சொன்னார். 3 மாதம் இருந்தது. அதற்குள் 82 கிலோ ஏற்றிக் கொண்டு ஷூட் சென்றேன். அவங்க பார்த்ததும் ஓகே என்று விட்டார்கள். என் குரல் அதற்கு ஏற்றவாறு இருந்தது எனக்கு ஒரு ப்ளஸ். எனக்கு டப்பிங் பேச வேறு ஒருவரை ஏற்பாடு செய்த போது கமல் சார் தான், ‘அவரை பேச வைங்க, அவர் ஸ்லாங் நல்லா இருக்கு’ என்று கூறினார். நான், பொன்னம்பலம் , இந்தியன் பாஸ்கர், ராஜசேகர் எல்லாருமே ஒரு பேட்ஜ் தான். நாங்கள் எல்லாம் டூப் ஆர்டிஸ்ட். எங்களை ‘ஏ’ குரூப் என பிரிப்பார்கள். தாஸ் மாஸ்டர், விஜயன் மாஸ்டர், ராஜூ மாஸ்டர், விக்ரம் தர்மா மாஸ்டர், இவர்கள் நான்கு பேரிடம் தான் நான் 7 ஆண்டுகளாக மாறி மாறி பணியாற்றினேன்.

காதல் குறித்து சொன்னது:

மகாநதிக்கு பிறகு தான் மற்றவர்களிடம் பணியாற்றத் தொடங்கினேன். ஹீரோ இல்லை என்றால் எங்களுக்கு வேலை இல்லை. அதனால் ஹீரோக்களை நாங்கள் பூ மாதிரி பார்த்துக் கொள்வோம். ராசுக்குட்டி படத்தில் பாக்யராஜ் சாருக்கு டூப் போட்டு க்ளைமாக்ஸ் காட்சியில் தீயில் புகுந்து வர வேண்டும். நான் செய்த காட்சியை பார்த்து, ‘எனக்காக ஒருத்தன் சாகக் கூடாது’ என அங்கிருந்து பாக்யராஜ் சார் ஓடி விட்டார். தங்கமான நடிகர் அவர். ஆக்‌ஷனில் இருந்து அப்படியே நேர்எதிர் காமெடிக்கு வந்துட்டேன். அதற்கு செல்வா சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். முதலில் கோல்மால் படத்தில் தான் காமெடியனானேன். லவ் இல்லாத இளம் பருவம் இருக்குமா? எல்லாரும் அந்த வயதை கடந்து தானே வருவோம். எனக்கு இளம் வயதில் ஆசை இருந்திருக்கிறது. என்னை பார்த்தாலே பெண்கள் திரும்பிவிடுவார்கள். சுமாராக இருக்கும் பெண்கள் கூட என்னை பார்த்து திரும்பிவிடுவார்கள். சிலம்பம், பாக்சிஸ் எல்லாவற்றிலும் நான் முதல் பரிசு பெறுவேன். எல்லாவற்றிலும் நான் தான் நம்பர் 1. ஆனால் என் வாழ்க்கையில் லவ் என்பதே கிடைக்காமல் போனதில் நான் தோல்வியடைந்தவன். அந்த வயது போனது, போனது தான். நான் வருத்தப்பட்டது வருத்தப்பட்டது தான். அந்த வருத்தத்தை இனி தீர்க்க முடியாது. இன்று என் மனைவியை காதலிக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement