பௌர்ணமிக்கும் பதஞ்சலிக்கும் என்ன சம்பந்தம்? மல்யுத்த வீராங்கனைகளை விமர்சித்தவரை வெச்சு செய்த நடிகை

0
1429
Vinodhini
- Advertisement -

பாஜக எம் பி க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீராங்கனைகளை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட நபருக்கு நடிகை வினோதினி கொடுத்திருக்கும் பதிலடி தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. டெல்லியில் மல்யுத வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு தரப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக எம் பி யும் இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு வீராங்கனைகள் இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறார்கள். இதனை அடுத்து இந்திய மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்திரில் ஒன்று கூடி போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதில் சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் போன்ற பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். மாதக்கணக்கில் மல்யுத்த வீராங்கனைகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவின் போது அதை நோக்கி பேரணியாக மல்யுத்த வீரர்கள் செல்ல முயன்றிருக்கிறார்கள்.

- Advertisement -

அப்போது வீராங்கனைகளை போலீசார் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். பின் ஒலிம்பிக், சர்வதேச மல்யுத்தம் போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகியோரை போலீஸ் கைது செய்யப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை எல்லாம் இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் ஒருவர், அரசின் விருதுகள், சலுகைகள் அனைத்தையும் பெற்று அனுபவித்த பின் விழித்துக் கொண்டார்களா? ஏன் அவர்கள் விருதுகளை மட்டும் நிராகரிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

வீராங்கனைகளை விமர்சித்த நபர்:

இந்த ட்விட் சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்த ட்விட்டருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை வினோதினி கூறியிருப்பது, எந்த வித அரசியல் நிலைப்பாடும் இல்லாமல் சொல்கிறேன். நான் பள்ளியில் ஒரு லெமன் அண்ட் ஸ்பூன் ரேஸில் ஓடி பங்களிப்பு சான்றிதழ் வாங்கி இருக்கிறேன். அந்த போட்டியை நடத்திய பிடி மாஸ்டர் ஒரு பொறுக்கி. போட்டி நடப்பதற்கு முன்னால் என்னிடம் ஒரு ஆட்டத்தை ஆட முயற்சித்தான்.

-விளம்பரம்-

வினோதினி டீவ்ட்:

அட மூதேவி சனியனே என்று அவனை சபித்துக் கொண்டே நானும் போட்டியிட்டேன். பின் போட்டியில் வென்று மேடையில் எனக்கு சான்றிதழ் கொடுக்கிறார்கள். அப்போது என்னால் அவனைப் பற்றி தைரியமாக பேச முடியவில்லை. வீட்டிற்கு வந்து இது குறித்து பெற்றோரிடம் சொல்கிறேன். அவர்களும் அவனைக் கவனித்து விடலாம் என்று எனக்கு ஆறுதல் கூறி என்னுடைய பள்ளிக்கூட பிரின்சிபல் இடம் கூறுகிறார்கள். எல்லோரும் எனக்கு நடந்த அத்துமீறலை பேசிக் கொண்டிருக்கும் போது ஒருத்தன் மட்டும் வந்து அந்த பங்களிப்பு சான்றிதழ் திருப்பி கொடு என்று கேட்டார்.

வினோதினி கொடுத்த பதிலடி:

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்னடா சம்பந்தம்? பௌர்ணமிக்கும் பதஞ்சலிக்கும் என்னடா சம்பந்தம்? என்று தோணுமா தோணாதா? எதுனாலும் லைன்ல வந்து ரிப்ளை பண்ணுங்க. எங்க வீட்டு பிகாரி சமையல்காரர் பரோட்டா செய்திருக்கிறார். பிரிட்ஜ் பூசணிக்காக கொண்டு ஏதோ ஒரு குருமா வச்சிருக்கார். ஒரு டீயையும் ரெடி பண்ணி கொண்டு உங்க கமெண்ட்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். லெமன் ஸ்பூன் ரேசும் தேசிய அளவிலான போட்டியும் ஒன்னா என்றெல்லாம் கேட்கக்கூடாது. லெமன் ஸ்பூன் விளையாட்டை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement