கொம்பன் படத்தை தொடர்ந்து கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய விருமன் – இந்த முறையும் அவர் பஞ்சாயத்து செய்து வைப்பாரா ?

0
253
viruman
- Advertisement -

கார்த்திக் நடித்த விருமன் படம் கதை திருட்டு சிக்கலில் சிக்கி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதனைத் தொடர்ந்து இவர் கொம்பன், மருது, தேவராட்டம், புலிகுத்தி பாண்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். பெரும்பாலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும். அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

விருமன் படம்:

இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இசை வெளியீட்டு விழா:

கடந்த வாரம் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் கார்த்திக், அதிதி,சூரி உட்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டு சிறப்பித்திருந்தனர். இதனை அடுத்து படத்தின் விளம்பரத்திற்காக படக்குழு மும்முரமாக செயல் பட்டு வருகிறது. மேலும், இந்த படம் வருகிற 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

முத்தையா- கார்த்திக் கூட்டணி கதை திருட்டு:

இந்நிலையில் விருமன் படம் கதை திருட்டில் சிக்கியுள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. முத்தையா- கார்த்திக் கூட்டணியில் முதன் முதலில் வெளிவந்த படம் கொம்பன். இந்த படம் வெளிவந்த போது திருட்டு வழக்கில் சிக்கி இருந்தது. இதை நடிகர் பாக்கியராஜ் தான் பேசி சுமூகமாக முடித்து வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அதே பிரச்சனையில் விருமன் படம் சிக்கி இருக்கிறது.

திருட்டு கதையில் சிக்கிய விருமன் படம்:

அதாவது, இணை இயக்குனர் ஒருவர் தன்னுடைய கதை தான் விருமன் என்று கூறி எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து ஆர்கே சுரேஷ் மற்றும் கார்த்திக் சமாதானம் பேசி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒருமுறை கதை திருட்டு சம்பவத்தில் சிக்கிய அதே கூட்டணி தான் தற்போது மீண்டும் கதை திருட்டு பிரச்சனையில் மாட்டி இருக்கிறது. இதனால் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள விருமன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement