கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் 10 நாளில் விருமன் படம் செய்துள்ள மொத்த வசூல்.

0
613
viruman
- Advertisement -

நடிகர் கார்த்தியின் விருமன் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல் குறித்த விவரம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
viruman

குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதனைத் தொடர்ந்து இவர் கொம்பன், மருது, தேவராட்டம், புலிகுத்தி பாண்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் முத்தையா இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும். அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

விருமன் படம்:

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி சங்கர் நடித்து இருக்கிறார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

படத்தின் கதை:

படத்தில் ஊர் தாசில்தாராக இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு நான்கு மகன்கள் இருக்கின்றன. அதில், கடைசி மகன் தான் கார்த்தி. கார்த்தியின் தாயாராக சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கிறார். கார்த்தி தன் தந்தையை விட தாய் மீது தான் அதிகம் பாசம் வைத்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் சரண்யா பொன்வண்ணன் இறந்து விடுகிறார். தன்னுடைய தாயார் இறப்பிற்கு பிரகாஷ்ராஜ் காரணமாக இருப்பதால் அவரை கொல்ல வேண்டும் என்று கோபத்துடன் கார்த்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

இதனால் இவர்கள் குடும்பத்திலேயே பல பிரச்சனைகள் வெடிக்கின்றது. கார்த்தியின் செயல்களால் கோபமடையும் பிரகாஷ்ராஜ் கார்த்தியை ஏமாற்றி அவரது தாயார் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்கிறார். இறுதியில் சரண்யா பொன்வண்ணனின் இறப்பிற்கு என்ன காரணம் ? தன்னுடைய தந்தை பிரகாஷ்ராஜை கார்த்தி கொலை செய்தாரா? இல்லை குடும்பத்துடன் மீண்டும் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் வெற்றி விழா:

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் தமிழகம் முழுவதும் 475 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் முதல் நாளில் மட்டும் இந்தப்படம் 8 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. தற்போது இந்த படம் நல்ல வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல் படம் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்த நிலையில் படக்குழுவினர் வெற்றி விழா கொண்டாடி இருந்தார்கள்.

படத்தின் வசூல்:

இந்த நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது வரை விருமன் படம் உலகம் முழுவதும் 55 கோடி வரை வசூலித்து இருக்கிறது. இனி வரும் நாட்களிலும் படம் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விருமன் படக்குழுவினர் சந்தோசத்தில் திகழ்கின்றனர்.

Advertisement