‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து குறித்து விஷால், எஸ்ஜே சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்

0
399
Vishal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே. அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளிவந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். சமீபத்தில் வெளியான லத்தி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.தற்போது நடிகர் விஷால் தன்னுடைய 33வது படமான “மார்க் ஆண்டனி என்ற படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார், எஸ் ஜே சூரிய இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் அபிநயா, ரோட்டு வர்மா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சுனில், மலேஷிய நடிகர் டி.எஸ்.ஜி மற்றும் இயக்குனர் மற்றும் நடிகருமான செல்வராகவன் நடித்து வருவதாக தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தான் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என கூறப்படும் ஒரு பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் “லாரி ஓன்று ஆக்ஷன் சொன்னதும் வருகிறது. ஆனால் அந்த வாகனம் கட்டுப்பாட்டை மீறி வேகமாக வந்து செட்டில் மோதுகிறது. அந்த மோதலின் போது அங்கு பல சினிமா தொழிலாளர்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் இருந்தனர்.

-விளம்பரம்-

லாரி நிற்காமல் வருவதை பார்த்த அங்குள்ள தொழிலாளர்கள் இரு புறம் சிதறி ஓடினர். பின்னர் லாரில் செட்டில் வேகமாக வந்து மோதியது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக அடிபடவில்லை இந்த நிலையில் இந்த விபத்து குறித்து எஸ்ஜே சூர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதலை பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த விபத்து குறித்து எஸ்ஜே சூர்யா கூறியபோது, ‘உண்மையில் கடவுளுக்கு தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

நூலிழையில் உயிர் தப்பினோம். திட்டமிட்டபடி அந்த லாரி நேராக வரவேண்டும், ஆனால் திசை மாறியதால் நாங்கள் உயிர் பிழைத்தோம். அவ்வாறு இல்லை என்றால் இந்நேரம் எங்களால் டுவிட் செய்திருக்க முடியாது, கடவுள் அருளால் தப்பினோம்’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதே போல இந்த விபத்து குறித்து பதிவிட்டுள்ள விஷால் ‘’ஒரு சில நொடிகள் மற்றும் ஒரு சில இன்ச் வித்தியாசத்தில் நாங்கள் தப்பித்தோம், கடவுளுக்கு நன்றி’ என்றும் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது

Advertisement