வரலக்ஷ்மிக்கு திருமணம் என்று கேள்விப்பட்டது – முதன் முறையாக மனம் திறந்த விஷால். இதோ வீடியோ.

0
331
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிஇருந்தார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்துஇருந்தார். மேலும், ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலின் இந்த படம் வெற்றியைத் தந்திருக்கிறது. இதனை அடுத்து விஷால் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் இன்னும் இவருக்கு திருமணம் ஆகாது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலருமே விஷாலுக்கு எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே வருகிறார்கள்.

- Advertisement -

இது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் ஒரு சர்ச்சையாகவே இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு விஷால் அவர்கள் அணிசா என்பவரை காதலித்திருந்தார். பின் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை இவர்கள் திருமணம் நடைபெறவில்லை. அதே போல விஷால், லட்சுமி மேனன் மற்றும் வரலக்ஷ்மியுடன் காதல் கிசு கிசுவில் கூட சிக்கி இருந்தார்.

னால், இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். அதற்குப்பின் விஷால் குறித்து எந்த ஒரு காதல் கிசு கிசுவும் சோசியல் மீடியாவில் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் வரலக்ஷ்மிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் விஷால் ‘ வரலக்ஷ்மி திருமண செய்தியை கேட்டதும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

-விளம்பரம்-

அவர் சினிமாவில் கஷ்டப்பட்ட காலத்தில் இருந்து நான் பார்த்து வருகிறேன். இன்று அவர் ஒரு சிறந்த நடிகையாக இருந்து வருகிறார். அனைத்து பெண்களும் ஒரு கட்டத்தில் அனைத்தையும் விட்டுவிட்டு வாழ்க்கையில் செட்டில் ஆக பார்ப்பார்கள். அது போல தான் வரலக்ஷ்மியின் இந்த முடிவும். வரலக்ஷ்மியின் தாயார் அவரை மிகவும் நன்றாக வளர்த்து இருக்கிறார். அவர் எனக்கும் அம்மா போன்றவர் தான்.

வரலக்ஷ்மி கணவர் :

அந்த அம்மா வளர்த்த பெண் வரலக்ஷ்மி நான் பார்த்த தைரியமான பெண்களில் ஒருவர். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து இருப்பதை நினைத்து நான் சந்தோசப்படுறேன்’ என்று கூறியுள்ளார். வரலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டுள்ள நிக்கோலை சச்தேவ்விற்கு ஏற்கனவே கவிதா என்ற மாடல் அழகியுடன் திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகளே இருக்கிறார். இவரது முன்னாள் மனைவி கவிதா Mrs Gladrags 2010 என்ற பட்டத்தையும் கலிபோர்னியாவில் 2007ஆம் ஆண்டு Mrs Globe 2011 என்ற அழகி போட்டியில் இரண்டாம் இடத்தையும் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement