விஸ்வரூபம் எடுத்த ஸ்ரீரெட்டி விவகாரம்.! அதிரடி முடிவெடுத்த விஷால்.!

0
570
Vishal-Srireddy
- Advertisement -

சில மாதங்களாக தெலுகு சினிமாவில் நடிகைகள் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பி வந்த நடிகை ஸ்ரீ ரெட்டி. தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பெயர்களை ஆதாரத்துடன் வெளியிட்டு வந்தார்.

-விளம்பரம்-

அதே போல தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருகிறார். தமிழ் சினிமா நடிகர்களான லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்ற பல நடிகர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்து நாசம் செய்த்தனர் என்று பகீர் குற்றசாட்டை கூறியிருந்தார்.

- Advertisement -

ஸ்ரீரெட்டி, சின்மயி விவாகரத்திற்கு பின்னர் திரையுலகில் நடிக்கும் பாலியல் அத்துமீறல்களை விசாரிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ‘மீ டூ’ ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட உள்ளது.

சினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு

இந்த குழுவின் தலைவராக நடிகர் சங்க தலைவர் நாசர் செயல்படுவார். சங்க உறுப்பினர்களாக விஷால், கார்த்தி, பூச்சி முருகன், நடிகைகள் குஷ்பு, ரோகிணி, சுஹாசினி மற்றும் சமூக ஆர்வலர், வக்கீல் உள்பட 8 பேர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் மீ டூ விடயங்களை தடுக்க சங்கம் அமைக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement