அஜித் எனக்கு ஒரு நடிகராத்தான் தெரியும்..! அஜித்திடம் இது எனக்கு பிடிக்காது..ஆனால் விஜய்…

0
1075

நடிகர் சங்கம் நடத்தும் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர கிரிக்கெட், பல பிரச்னைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்கள்…எதிலும் அஜீத் கலந்துக்கிறதில்லை. நடிகர் சங்க நிர்வாகி என்ற முறையில் நீங்க இதை எப்படிப் பார்க்கிறீங்க?”

அது அவரோட விருப்பம். யாரையும் நாம கட்டாயப்படுத்த முடியாது. அதனால, இந்தக் கேள்விக்கான பதிலை அவர்தான் சொல்லணும். தவிர, ஏன் வரலை, ஏன் குரல் கொடுக்கலைனு கேட்பதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி இவங்க எல்லோரும் என் நெருங்கிய நண்பர்கள். அவங்ககிட்ட நான் உரிமையாக் கேட்கலாம்; சொல்லலாம். அஜித்தை எனக்கு ஒரு நடிகராத்தான் தெரியும். அவர்கிட்ட அப்படி உரிமையாக் கேட்க முடியாது!”

உங்களோடு தொடர்புடைய சிலரின் புகைப்படங்கள் இங்கே இருக்கு. அவங்களிடம் பிடிக்காத விஷயங்களை நீங்க சொல்லணும்..

விஜய்: “இவர்கிட்ட பிடிச்சது என்னன்னு கேட்டா அரைமணி நேரம் பேசுவேன். விஜய் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோட தன்னம்பிக்கை பிடிக்கும். . அவரோட பொறுமை பிடிக்கும். ஏன்னா, அவருக்கு வந்த விமர்சனங்களெல்லாம் சாதாரணமானது கிடையாது.

vijays-thuppakki

இவர் இடத்துல மத்தவங்க இருந்திருந்தா, எல்லாத்தையும் விட்டுட்டுப் போயிருப்பாங்க. ஆனா, அதையெல்லாம் மீறி நிற்கிறார்னா, ஹாட்ஸ் ஆஃப் டூ விஜய் சார்! மத்தபடி, பிடிக்காததுனு விஜய் சார்கிட்ட எதுவும் இல்லை.”

அஜித்: “அன்-அவைலபிளா இருப்பார். ஒரு விஷயம் பண்ணும்போது, அவரைச் சந்திக்க முடியாது. இதுமட்டும்தான் அவர்கிட்ட எனக்குப் பிடிக்காத விஷயம். ரீச் பண்ண முடியாத இடத்துல இருப்பதுதான் அஜித்திடம் எனக்குப் பிடிக்காத விஷயம்!”