பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலக இது தான் காரணமா? – வீடியோவுடன் விஷால் போட்ட பதிவு.

0
346
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நடிகர் எழில் விஷால் விலகி இருப்பதற்கான காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார்.

-விளம்பரம்-

இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று பிசியாக சுற்றி கொண்டிருக்கிறார். பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்ட்ராண்ட் திறக்கிறார். தற்போது ராதிகா கர்ப்பமாக இருப்பதாக புதிய ட்ராக்கை ஆரம்பித்து இருக்கின்றனர்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

கோபிக்கு பேரன், பேத்தி இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் தந்தையாகி இருக்கிறார் கோபி. ஆனால், இதை வீட்டில் சொல்ல கோபி தயங்குகிறார். இந்த உண்மையை பாக்யா கண்டுபிடித்து ராதிகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். மேலும், வீட்டில் எல்லோருக்குமே உண்மை தெரிந்து அதிர்ச்சி ஆகிறார்கள். பின் செழியன்- எழில் இருவருமே சேர்ந்து கோபியை வீட்டை விட்டு அனுப்புகிறார்கள். கோபி, ஈஸ்வரியை தன்னோடு அழைத்து கொண்டு சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

தற்போது சீரியலில் ஈஸ்வரி, ராதிகா அம்மா இடையே கலவரங்கள் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்தத் தொடரில் பாக்கியலட்சுமியின் மகனாக எழில் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஷால் நடித்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம். விஜே விஷால் முதன்முதலில் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டார். அதன் பின் இவர் கல்யாணமாம் கல்யாணம் என்ற சீரியலில் நடித்தார்.

-விளம்பரம்-

சீரியலை விட்டு விலகிய எழில்:

அதை தொடர்ந்து இவர் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்தார். தற்போது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதனிடையே இவர் தளபதி விஜயுடன் சேர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் சில படங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து எழில் கதாபாத்திரத்தில் நடித்த விஷால் தான் விலகி இருக்கிறார்.

சீரியலை விட்டு விலக காரணம்:

இவருக்கு பதில் சீரியல் நடிகர் நவீன் நடிக்கிறார். விஷால் சீரியல் இருந்து விலகி இருப்பது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து ரசிகர்கள் கேள்வி கேட்டிருந்தார் கேட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து விஷால் அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், புதிய அறிவிப்பு வர இருக்கிறது என்று மாசாக ஒரு வீடியோவை பதிவு செய்திருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விஷால் நடிப்பது படத்திலா? புது சீரியலா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement