புனித ராஜ்குமார் மூலம் கல்வி பயின்று அந்த 1800 மாணவர்களின் ஏற்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளது பலரின் பாராட்டை பெற்று வருகிறது. கன்னட திரையுலகில் பவர்ஸ்டாராக கொடி கட்டி பறந்தவர் புனீத் ராஜ்குமார். கன்னட மொழியில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் இவர் 15 பள்ளிகளை நடத்தி அதில் அனைவருக்கும் இலவச கல்வியை கொடுத்திருக்கிறார். அதேபோல 16 முதியோர் இல்லங்கள், 19 கோசாலை போன்றவை தன்னுடைய சொந்தப் பணத்திலேயே மக்களுக்கு உதவி செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல்இவர் 1800 மாணவர்கள் படிப்பதற்காக கல்வி வழிவகை செய்துள்ளார். இப்படி இலவச பள்ளிகள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என கர்நாடக மக்களுக்காக இவர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அவ்வளவு ஏன் இறுதியாக அவர் இறந்த போது கூட அவர் கண்ணை தானாம் செய்துவிட்டு தான் சென்றார்.
இந்த நிலையில் புனித் ராஜ்குமாரிடம் இலவசக் கல்வி பெற்று வந்த மாணவர்களின் செலவை தமிழ் சினிமாவின் புரட்சி தளபதி என்று அழைக்கப்படும் விஷால் ஏற்றுக்கொண்டுள்ளார். நடிகர் விஷால் தற்போது ‘எனிமி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவை தொடங்கும் முன் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது பேசிய விஷால், “புனீத் ராஜ்குமார் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல நண்பரும் கூட. அவரைப் போன்ற தன்னடமான மனிதரை நான் பார்த்தது இல்லை. நடிகராக மட்டுமல்லாமல் அவர் பல சமூகப் பணிகளைச் செய்து வந்தார். புனித் ராஜ்குமாரிடம் இலவசக் கல்வி பெற்று வரும் 1800 மாணவர்களையும் அடுத்த ஆண்டு முதல் நான் கவனித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஷால்