தயாரிப்பாளர் சங்கத்தை எச்சரித்திருக்கும் நடிகர் விஷால் – இது தான் காரணம்

0
299
- Advertisement -

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கெடு வைத்திருக்கும் விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் சாதனையும் செய்திருக்கிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தில் பொது செயலாளராகவும் இருக்கிறார்.

-விளம்பரம்-

அதேபோல், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் வைப்பு நிதியை நடிகர் விஷால் அவர்கள் பொறுப்பற்ற முறையில் தேவையில்லாமல் செலவு செய்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் தனிக்குழு அமைத்து விசாரணையும் நடத்தி இருக்கிறார்கள். அதில், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் 12 கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தயாரிப்பாளர் சங்கம் புகார்:

இந்த இழப்புக்கு விஷால் தக்க பதில் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், விஷால் தரப்பிலிருந்து எந்த பதிலுமே வரவில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் குழு கூறப்பட்டது. இதனால் தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தது. அதில், இனி விஷால் நடிக்கும் புதிய படத்தினுடைய தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் ஆலோசனை கேட்ட பிறகு தான் பட வேலைகளை தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை:

இதனால் விஷாலை வைத்து படம் இயக்குவதற்கு பல தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா வட்டாரத்தில் விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ரெட் கார்டும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விஷால், நான் 2017 முதல் 19ஆம் ஆண்டு வரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பதவியில் இருந்தேன். அப்போது தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த நலிந்த உறுப்பினர்களுக்காக பல நலத்திட்டங்களை செய்திருக்கிறேன்.

-விளம்பரம்-

விஷால் கொடுத்த விளக்கம்:

இதை நான் சங்கத்தின் வைப்பு நிதியை வைத்துதான் செய்தேன். அதுவும் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழுவிடம் அனுமதி வாங்கி தான் செய்தேன். தனிப்பட்ட முறையில் எதுவும் செய்யவில்லை. என்னை தவறாக சித்தரிக்கும் தயாரிப்பாளர் நிர்வாகத்தினர் மீது மான நஷ்ட வழக்குத் தொடர்வேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் கேடு வைத்துள்ளார். அதாவது, தன் மீது குற்றம் சுமத்தி வெளியிடப்பட்ட அறிக்கையை திரும்ப பெறுமாறு கேட்டுள்ளார்.

விஷால் வைத்த கெடு:

இது போல் தயாரிப்பாளர் சங்கம் அறிக்கையை திரும்ப பெறாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அனுப்பப்பட்ட அறிக்கைக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்த அறிக்கையை வன்ம அறிக்கை என சுட்டிக்காட்டி உள்ளார். அதனால் இதற்கான பதிலை விரைவில் தயாரிப்பாளர் சங்க தரப்பினரிடமிருந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement