தென் இந்திய சினிமா பிரபலங்களுக்கான அங்கீகாரம்தான் சைமா விருது விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 8வது ஆண்டாக சைமா விருதுகள் விழா சமீபத்தில் துவங்கியது.கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) முதல் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
திரையுலகில் மதிப்புமிக்க சைமா விருதுகளை தமிழ் சினிமாவில் இருந்து 2109 ஆம் ஆண்டில் தனுஷ் இயக்குநர் பாண்டிராஜ் முதலானோர் வென்றுள்ளனர். மேலும், திரிஷா, வரலக்ஷ்மி போன்ற பல்வேறு நபர்களும் விருதுகளை கைப்பற்றினர். சிறந்த படமாக பரியேறும் பெருமாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதையும் பாருங்க : நீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி.! வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.!
இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்திற்கு எந்த தரப்பிலும் விருது வழங்கப்படவில்லை விஷ்ணு விஷால் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷ்ணு விஷால், ராட்சசன் எந்த விருதுக்கும் பரிந்துரைக்கப்படவில்லை. மக்கள் ஏற்றுக்கொண்டதே மிகப்பெரிய விருது. உங்கள் அன்பிற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
விஷ்ணு விஷாலின் இந்த பதிவிற்கு ஆதரவாக நடிகர் சாந்தனு, ரமேஷ் திலக் போன்ற பல்வேறு நடிகர்களும் மக்கள் ஆதரவே இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி தான் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், ரசிகர்களும் விஷ்ணு விஷாலுக்கு ஆதரவாக கமன்ட் செய்து வருகின்றனர்.