பொண்ணுங்க போடலாம் பசங்க போட்டா தப்பான்னு என் மனைவி தான் அந்த போட்டோவ லீக் பண்ணாங்க – விஷ்ணு விஷால்.

0
576
- Advertisement -

நிர்வாண புகைப்படம் குறித்த சர்ச்சைக்கு விஷ்ணு விஷால் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

-விளம்பரம்-

அதிலும் சமீபகாலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘எப்.ஐ.ஆர்’. இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

கட்டா குஸ்தி படம்:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் படம் கட்டா குஸ்தி. இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்குகிறார். இந்த படத்தில் ரவி தேஜா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். மேலும், இந்த படம் டிசம்பர் இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது. குஸ்தி சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

விஷ்ணு விஷால் அளித்த பேட்டி:

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் சேர்ந்து பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார்கள். அதில் அவர்கள் கட்டா குஸ்தி திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அப்போது விஷ்ணு விஷாலின் சமீபத்தில் வெளிவந்திருந்த சர்ச்சை போட்டோ குறித்து கேள்வி கேட்டு இருந்தார்கள். அதற்கு விஷ்ணு விஷால் கூறியது, அந்த போட்டோ கிளிக் பண்ணது என்னுடைய மனைவிதான். என்னோட வைஃப் தான் சோசியல் மீடியாவிலும் போட சொன்னது.

-விளம்பரம்-

சர்ச்சை போட்டோவுக்கு விளக்கம் கொடுத்த விஷ்ணு விஷால்:

உண்மையாக, அந்த போட்டோ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எடுத்தது. அந்த சமயத்தில் போட வேண்டாம் என்று முடிவெடுத்தோம். அப்போதுதான் ரன்வீர் சிங் போட்டோ வெளிவந்தது. அவர்கள் செய்யும் போது ஏன் நாம செய்யக்கூடாது? பொண்ணுங்க போடலாம் பசங்க போட்டா தப்பான்னு என் மனைவி கேட்டாள். அவர் சொன்னதற்கு பிறகு அந்த புகைப்படத்தை பகிர்ந்தேன். இந்த போட்டோ வந்தால் எப்படியும் கண்டிப்பாக என்னை திட்டுவார்கள், நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரும் என்று எனக்கு தெரியும். தெரியாமல் எல்லாம் நான் செய்யவில்லை. நான் இதற்கு முன்னாடி நிறைய நல்ல போட்டோக்களை எல்லாம் பகிர்ந்து இருக்கிறேன்.

நிர்வாண போட்ட போட காரணம்:

ஆனால், இந்த ஒரு போட்டோவுக்கு வந்த ரெஸ்பான்ஸ் வேற எந்த போட்டோவுக்குமே எனக்கு வந்தது இல்லை.
ஒரு சின்ன நெகட்டிவிட்டி இருந்தால் அந்த அளவுக்கு பிரபலம் ஆகும் என்பதை இந்த ஒரு போட்டோ மூலம் தெரிந்து கொண்டேன். நெகட்டிவிட்டியே இல்லாத போது யாரும் பெருசா பேசவில்லை. நெகட்டிவ் இருக்கும்போது தான் எல்லா மீடியாவும் பேசினார்கள். என் மீதான ஒரு இமேஜை உடைக்க அந்த புகைப்படத்தை நான் பகிர்ந்தேன். நடிகராக எந்த கதாபாத்திரம் என்றாலும் செய்ய முடியும் என்று தெரிய வேண்டும் என்பதற்கான கண்ணோட்டத்தில் நான் அதை பகிர்ந்தேன். எவ்வளவு நாளைக்கு நான் ரொம்ப நல்ல பையன் என்ற ரோலை மட்டும் செய்வது. அந்த இமேஜை உடைக்க தான் நான் அதை செய்தேன் என்று கூறியிருந்தார்.

Advertisement