ஒய்.ஜி.மகேந்திரனின் அட்டர் ஃப்ளாப் படத்தை 11 ஆண்டுகள் கழித்து எடுத்து அமோக வெற்றியாக்கிய விசு.

0
673
visu
- Advertisement -

ஒய்ஜி மகேந்திரனின் அட்டர் ஃப்ளாப் படத்தை விசு அமோக வெற்றியாக கொடுத்த படம் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ஒய்.ஜி மகேந்திரன். இவர் ரஜினி,கமல்,விஜயகாந்த் என்று பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார். மேலும், இவர் பல படங்களில் குணசித்ர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்து இருந்தார். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நாடக நடிகர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு இருந்தவர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் ஒய்ஜி மகேந்திரனின் அட்டர் ஃப்ளாப் படத்தை வெற்றிப் படமாக்கிய விசு படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுஎன்னவென்றால், ஒய் ஜி மகேந்திரன் இயக்கத்தில் 1975ஆம் ஆண்டு வெளிவந்த படம் உறவுக்கு கைகொடுப்போம். இந்த படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஆனால், முதலில் வீசி எழுதிய நாடகம் தான் உறவுக்கு கைகொடுப்போம். இது வெற்றிகரமாக ஓடிய நாடகம். ஒரு கூட்டு குடும்பத்தில் ஊதாரித்தனமான செலவழிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை நாடகம் நகைச்சுவை கலந்து சொல்லியிருப்பார்கள்.

இதையும் பாருங்க : புதிய காரை வாங்கி தனது மகனை கெத்தாக கூட்டி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா. குவியும் வாழ்த்துக்கள்.

- Advertisement -

உறவுக்கு கை கொடுப்போம்:

நாடகத்தின் வெற்றியைப் பார்த்த இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் நாடகத்தின் கதை உரிமையை வாங்கி அதே பெயரில் தனது சித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து இருந்தார். பின் சினிமாவுக்காக கதை, காட்சி, வசனங்களில் திருத்தங்களும் செய்திருந்தார். படத்தில் வரும் குடும்பத்தின் தலைவராக விஎஸ் ராகவன் நடித்திருந்தார். மூத்த மகனாக ஜெமினிகணேசனும், வீட்டில் உள்ள அனைவரையும் அனுசரித்து செயல்படும் மூத்த மருமகளாக சௌகார் ஜானகியும் நடித்திருந்தனர். வெற்றிகரமாக ஓடிய நாடகம் தானே இதனால் சினிமாவில் நன்றாக ஓடும் என்ற நம்பிக்கையில் படம் எடுத்து வெளியிட்டு இருந்தார்கள்.

உறவுக்கு கை கொடுப்போம் படம் தோல்விக்கு காரணம்:

ஆனால், படம் தோல்வி அடைந்தது. தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தது. விசுவின் கதையில் மாற்றங்கள் செய்ததே தோல்விக்கு காரணம் என அப்போது பேசப்பட்டு இருந்தது. உறவுக்கு கை கொடுப்போம் படத்தின் டைட்டிலில் மூலக்கதை விசு என்று கிரெடிட் கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது மூலக்கதையை எடுத்துக் கொண்டு பலவற்றையும் சினிமாவுக்காக மாற்றியிருந்தனர். இதனால் பட தோல்விக்கு விசு தான் காரணம் என்று கூறி இருந்தார்கள். பின் உறவுக்கு கைகொடுப்போம் படம் வெளிவந்து 11 வருடங்கள் கழித்து அதே கதையை மறுபடி எடுத்திருந்தார் விசு.

-விளம்பரம்-

சம்சாரம் அது மின்சாரம் :

குடும்பத்தலைவர் கதாபாத்திரத்தில் விசு நடித்திருந்தார். ஜெமினி கணேசன் நடித்த மூத்த மகன் கதாபாத்திரத்தில் ரகுவரனும், மூத்த மருமகள் சௌகார் ஜானகி நடித்த வேடத்தில் லட்சுமியும் நடித்திருந்தனர். வேலைக்காரப் பெண்மணி ஆக மனோரமா நடித்து இருந்தார். ஏவிஎம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்திற்கு சம்சாரம் அது மின்சாரம் என்று பெயர் வைத்து வெளியிட்டு இருந்தார்கள். 35 தினங்களில் 15 லட்சம் முதலீட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 1986 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது.

விசுவின் வெற்றிப்படம்:

உறவுக்கு கை கொடுப்போம் என்ற பெயரில் சினிமாவில் தோல்வி அடைந்த படத்தை சம்சாரம் அது மின்சாரம் என்ற பெயரில் 11 வருடங்கள் கழித்து விசு வெளியிட்டு இருந்தார். மேலும், மனோரமா நடித்த அந்த கதாபாத்திரம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இந்த படம் அமோக வெற்றி பெற்று 25 வாரங்களை கடந்து வெற்றி விழா கொண்டாடப்பட்டு இருந்தது. அந்த காலத்திலேயே சுமார் ஒன்றே முக்கால் கோடியை இந்தப் படம் வசூலித்து இருந்தது. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான தேசிய விருது உட்பட பல விருதுகளை இப்படம் பெற்று இருந்தது.

Advertisement