விசுவாசம் படத்தில் தம்பி ராமைய்யாவுக்கு ‘இரண்டு’ கெட்டப்பா..? புகைப்படம் இதோ.!

0
347

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் “விசுவாசம்” படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். அதுபோக இந்த படத்தில் விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமைய்யா என்று பல காமெடி நடிகர்களின் பட்டாளமே நடித்துள்ளார்கள்.

Thambi Ramaya

இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நடிகர் தம்பி ராமைய்யா , நடிகர் அஜித்தின் தாய் மாமனாக நடித்துள்ளார் என்று ஏற்கனவே தகவலைகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் நடிகர் தம்பி ராமையாவிற்கும் இந்த படத்தில் இரட்டை வேடம் என்று கூறபடுகிறது.

அதனை உறுதி செய்யும் விதமாக நடிகர் தம்பி ராமைய்யா இளமையாக இருக்கும் கெட்டப்பின் புகைப்படம் ஒன்றும், வெள்ளை முடி வைத்திற்குக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் தம்பி ராமைய்யா அஜித்திற்கு தாய் மாமனாக நடித்திருபதால் இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு வயதான கெட்டப் இருக்குமோ என்று ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர்.

Actor thambi ramiya

ஏற்கனவே, நடிகர் தம்பி ராமய்யா, நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் வெளியான “வீரம், வேதாளம் ” போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். எனவே, இந்த படத்திலும் தம்பி ராமைய்யா இரு கெட்டப்பில் செய்யும் காமெடிகள் ரசிகர்களை கவரும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.