அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பல்வேறு சாதனைகளை புரிந்திருந்தது.
Teaser Date of #Viswasam has LOCKED ! Coming very soon ! Celebration Starts #Thala #Ajith Fans. ??
— Umair Sandhu (@sandhumerry) December 5, 2018
படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் ,துபாயில் தணிக்கை குழுவின் முக்கிய உறுப்பினரான உமைர் சந்து என்பவர் இந்த படத்தின் டீசரை பார்த்துவிட்டு சிறிய விமர்சனம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் நேற்று (டிசம்பர் 4)பதிவிட்டிருந்தார்.
அதில் ஒரு பதிவில், தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் டீசரை பார்த்தேன், ஒரு வார்த்தை தான் : Mind Blowwing என்று பதிவிட்டுள்ளார். மேலும், மற்றுமொரு பதிவில், விஸ்வாசம் படத்தின் டீசரை பார்த்தேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இது தான் அஜித் படத்திலேயே மிக பெரிய மாஸ் ஹிட் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 5) அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘விஸ்வாசம்’ படத்தின் டீஸர் செய்தி தேதி உறுதியாகிவிட்டது என்றும், கொண்டாட்டம் விரைவில் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.