பேபி அனிகாவிற்கு அண்ணன் இருக்கிறாரா ? இவர் தான் அது. வைரலாகும் புகைப்படம்.

0
11584
babyanika
- Advertisement -

சினிமா உலகில் பல ஆண்டு காலமாகவே பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள். பேபி ஷாலினி தொடங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் அடைந்துள்ளார்கள். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய படங்கள் மூலம் தல அஜித் குமாருக்கு மகளாக நடித்த அனிகா ரசிகர்கள் மத்தியில் பயங்கர பிரபலமடைந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகை அனிகாவுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றும் சொல்லலாம்.

-விளம்பரம்-
அனிகா குடும்பம்

நடிகை அனிகா அவர்கள் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த கத திருடனும் என மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானர். தல அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளி வந்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். இவர் மலையாள மொழியில் பத்துக்கும் மேற்பட்ட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதுவும் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்

- Advertisement -

மேலும், நடிகை அனிகா அவர்கள் மலையாளம், தமிழ் என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்களிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிக ஆதரவை பெற்று வருகிறார். இதன் பின் தான் இவர் தமிழில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அனிகா தனது சகோதரர் குறித்து பேசியுள்ளார். அதில் அண்ணா பெயர் அங்கித். இன்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கிறார். படிப்பு, படப்பிடிப்பு காரணமாக இப்போதெல்லாம் நாங்கள் அனைவரும் ஒன்றாகச் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. 

anika

நானும் எனது அண்ணனும் சின்ன விஷயங்களுக்கு கூட நிறைய சண்டை போடுவோம். எங்களுக்குள் அதிகமாக சண்டை வருவதே டிவி ரிமோட்டிற்காக தான் இருக்கும் இருந்தாலும் அண்ணனை எனக்கு மிகவும் பிடிக்கும். முன்பு நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்த போது எங்களை சமாதானம் செய்யவே அம்மாவிற்கு நேரம் போதாது. ஆனால், தற்போது படிப்பு ஷூட்டிங் போன்ற காரணங்களால் நானும் அம்மாவும் தனியாக இருக்கிறோம். அண்ணன் கொஞ்சம் தூரத்தில் வேறு ஒரு வீட்டில் இருக்கிறான். அவனை மிகவும் மிஸ் செய்கிறேன் இருப்பினும் தினமும் அவனுக்கு போன் செய்து பேசி விடுவேன்.

-விளம்பரம்-
Advertisement