வர்மா பட அப்சட், வில்லனை ஹீரோவாக மாற்றிய பாலா. படத்திற்காக 18 கிலோவை ஏற்றிய நடிகர்.

0
66712
bala
- Advertisement -

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை எடுப்பதில் பாலாவும் ஒருவர் சேது படம் தொடங்கி நான் கடவுள் வரை இவர் எடுத்த பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது இறுதியாக ஜோதிகாவை வைத்து நாச்சியார் என்ற படத்தை இயக்கியிருந்தார் அதன்பின்னர் விக்ரம் மகன் கதாநாயகனாக அறிமுகமாக இருந்த வர்மா திரைப்படத்தை இயக்கி இருந்தார் ஆனால் இந்த திரைப்படம் முழுவதும் நிறைவடைந்த நிலையில் வெளியிடப்படாமல் கைவிடப்பட்டது இதனால் மிகுந்த அப்செட்டில் இருந்து வந்தார் பாலா.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-77-696x1024.jpg

- Advertisement -

மேலும் வருமா பணத்தினை வலைதள ஊடகங்கள் மூலம் பாலா வெளியிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது இந்த நிலையில் பாலா வர்மா படத்தில் அப்செட்டில் இருந்து மீண்டு தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார் இந்த படத்தில் தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்திருந்த ஆர்கே சுரேஷ் ஹீரோவாக களமிறங்கியுள்ளார் பாலா. தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ். தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் , சிஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தவர் ஆர்கே சுரேஷ்.

இதையும் பாருங்க : பேபி அனிகாவிற்கு அண்ணன் இருக்கிறாரா ? இவர் தான் அது. வைரலாகும் புகைப்படம்.

மேலும், தர்மதுரை படத்தில் இடம்பெற்ற மக்க கலங்குதப்பா என்ற பாடலிலும் தோன்றியிருந்தால் ஆர்கே சுரேஷ். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரா தப்பட்டை’ விஷால் நடிப்பில் வெளியான ‘மருது’ போன்ற படத்தில் வில்லனாக மிரட்டிய ஆர் கே சுரேஷ் கடந்த ஆண்டு வெளியான ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தினை விஜய் நடிப்பில் வெளியான ‘சர்க்கார்’ படத்திற்கு போட்டியாக வெளியிட்டிருந்தார் ஆர் கே சுரேஷ். ஆனால், பில்லா பாண்டி படம் பெரும் தோல்வி அடைந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-43.jpg

இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் ஆர் கே சுரேஷ். தற்போது மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள ஆர் கே சுரேஷ் பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக தீவிர உடற் பயிற்சிகளை செய்து வரும் ஆர் கே சுரேஷ் இந்த படத்திற்காக 18 கிலோ எடையை கூட்ட இருக்கிறாராம். சமீபத்தில் இவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.

Advertisement