ஸ்டேஜ்ல் நான் பேசுனத தப்பா நெனச்சிக்கிட்டான் – விவேக் சொன்ன பல ஆண்டு ரகசியம். இதான் அந்த வீடியோ.

0
59836
vivek
- Advertisement -

பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் விவேக். இவரின் காமெடியில் நகைச்சுவையும், சமூக சிந்தனை போன்ற விஷயங்கள் இருக்கும். அதனால் இவரை மக்கள் சின்ன கலைவாணர் என்று அழைத்து வருகின்றனர். இவர் தனது பயணத்தை மேடை நகைச்சுவை கலைஞராக தான் தொடங்கினார். பின்னர் 1987 ஆம் ஆண்டு சினிமாவில் கால் தடம் பதித்தார். இன்று வரை இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

வீடியோவில் 6 : 20 நிமிடத்தில் பார்க்கவும்

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விவேக் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தொகுப்பாளினி வடிவேலும், நீங்களும் ரெண்டு பேரும் சேர்ந்து படங்கள் பண்ணி இருக்கும் போது அவரால் ஏதாவது உங்களுக்கு பிரச்சனை வந்திருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு விவேக் அவர்கள் கூறியது, அந்த மாதிரி எல்லாம் வராது. காரணம் என்னவென்றால் என்னுடைய பாணி வேற, அவருடைய பாணி வேற. அவர் கிராமத்து பாணியில் போவார், நான் வந்து படித்த இளைஞனின் பார்வையில் பண்ணுவேன்.

இதையும் பாருங்க : கொரோனா பாதிப்பு, பணமின்றி தவிக்கும் கார் ஓட்டுனர். உருக்கமான பதிவை பகிர்ந்த காஜல்.

-விளம்பரம்-

அதனால் எங்கள் இரண்டு பேருக்கும் அந்த மாதிரி எந்த ஒரு பிரச்சினையும் வந்தது கிடையாது. ஒரே ஒரு முறை மட்டும் மேடையில் நான் சொன்னதை கொஞ்சம் தப்பா புரிந்துக் கொண்ட மாதிரி தெரிந்தது. அதற்கு என்னடா நல்லா பேசுறியே, என்ன நைட்டே உட்கார்ந்து ஸ்கிரிப்ட் எழுதி வாங்கி விட்டாயா என்று நான் கேட்டேன். அதற்கு அவன் அட போடா என் மனசுல தோன்னதா அப்படியே சொன்னேன் என்றார். அது மட்டும் தான் ] மற்றபடி எங்களுக்குள் எந்த பிரச்சினையும் கிடையாது.

விவேக் குறிப்பிட்ட அந்த வீடியோ இதுதான்

எப்பவுமே எங்களுடைய நட்பு இருக்கும். நான் நிறைய பேட்டிகளில் அவரைப் பற்றி சொல்லி இருக்கிறேன். ஆனால், அவர் எந்த பேட்டியிலும் என்னைப் பற்றி பேசியது கிடையாது. அது அவருடைய விருப்பம் என்று நினைத்துக் கொண்டேன். இருந்தாலும் அவர் மேல் இருக்கிற அன்பும், மதிப்பும் என்றும் குறையாது என்று கூறினார்.

தற்போது இவர் தாராள பிரபு என்ற படத்தில் நடித்திருக்கிறார். நடிகர் ஹரிஷ் கல்யான் ஹீரோவாக நடித்து உள்ள படம் தான் “தாராள பிரபு”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்து உள்ளார். ஹிந்தியில் ஆயுஷ்மான் குர்ரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் “தாராள பிரபு”. இந்த படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார்.

Sperm donation (விந்தணு தானம்) அடிப்படையாகக் கொண்டு ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகி உள்ள படம். இந்த படத்தை ஸ்கிரீன் சைன் மீடியா தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் அனிருத், ஷான் ரோல்டன், விவேக் – மெர்வின், மேட்லி ப்ளூஸ், பரத் ஷங்கர், ஊர்கா குழு, கபீர் வாசுகி மற்றும் இன்னோ கங்கா கபீர் 8 இசையமைப்பாளர்கள் பணிபுரிந்து உள்ளனர். இந்த படத்தில் செக்ஸாலஜி டாக்டராக காமெடி நடிகர் விவேக் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisement