கேப்டன் மில்லர் விழாவில் தன்னிடம் தவறாக நடந்துகொண்ட தனுஷ் ரசிகர் ஒருவரை தொகுப்பாளினி ஐஸ்வர்யா தாக்கி இருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் சிவராஜ்குமார், சுந்திப் கிஷன், பிரியங்கா மோகன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நேற்று இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 3, 2024
இந்த படத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஐஸ்வர்யா ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். மேலும், நிகழ்ச்சி முடிந்த பின்பு மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த தனுஷை பார்க்க அவருடைய ரசிகர்கள் பலரும் முட்டி மோதி வந்திருக்கிறார்கள். அப்போது அருகில் இருந்த ஐஸ்வர்யாவை தனுஷ் ரசிகர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார். இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா, அவரை அடித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து செருப்பால் அடிப்பேன் என்று கூறி இருக்கிறார்.
விழாவில் ஐஸ்வர்யா நடந்தது:
தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே மன்சூர் அலிகான் படத்தின் சரக்கு படத்தின் விழா ஒன்றில் கூல் சுரேஷ் இவருக்கு மாலை போட்டது பெரும் சர்ச்சையானது. இதனை தொடர்ந்து மேடையில் மன்னிப்பு கேட்டதோடு தனியாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு மன்னிப்பு கேட்டார். அந்த விவகாரம் குறித்து பேசிய ஐஸ்வர்யா ‘ அதை நினைத்தால் இன்னும் எனக்கு அதிர்ச்சியாக தான் இருக்கிறது.
கூல் சுரேஷ் செய்த வேலை:
என் தோள்பட்டையை பலவந்தமாக அழுத்தி திடீரென்று அப்படி நடந்து கொண்டார். பொது மேடையில் யாராவது இப்படி திடீரென்று நடந்தால் நம்மால் என்ன செய்ய முடியும் அந்த ஆள் கன்னத்தில் பளார் என்று ஒரு அடியாவது கொடுக்காமல் விட்டோமே என்று இப்போது நினைக்கிறேன். கிறுக்குத்தனத்திற்கு கொஞ்சம் எல்லைகள் இருக்கிறது தனிப்பட்ட யாரையும் அது பாதிக்காத படி இருக்க வேண்டும். இதற்கு முன்னால் கூட ஒரு நிகழ்ச்சியில் என்னிடம் வம்பு பண்ணினார்.
மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்:
பொதுவாகவே இவருடைய நடவடிக்கைகள் எனக்கு பிடிக்காது அதனால் அவரை மேடையில் அழைக்கும் போது கூட வெறும் நடிகர் கூல் சுரேஷ் என்றுதான் கூப்பிடுவேன் ஆனால் அவர் எனக்கு யூடியூப் ஸ்டார் என்று பட்டம் இருக்கிறது அதைச் சொல்லி கூப்பிட மாட்டீர்களா என்று கேட்டார் அதனால் தான் இந்த முறை என் கழுத்தில் வேண்டும் என்று மாலை போட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது இன்னொரு முறை இதுபோல நடந்தால் ஒன்று கன்னத்தில் ஒரு அடியாவது கொடுப்பேன் இல்லாவிட்டால் போலீசில் புகார் அளித்து விடுவேன்என்று கூறி இருந்தார்.