விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 13 வாரங்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. எந்தவித சுவாரசியமும் இல்லாமல் சென்ற இந்த Ticket To Finale டாஸ்கின் இறுதியில் விஷ்ணு வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றார்.
இப்படி ஒரு நிலையில் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் இந்த வாரம் துவங்கியது. பணப் பெட்டி டாஸ்க்கை பொறுத்த வரை ஒரு குறிப்பிட்ட தொகையில் இருந்து பணத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகும். ஒரு வேளை யாரும் அந்த பெட்டியை எடுக்கவில்லை என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையுடன் மீண்டும் அந்த பெட்டி எடுத்து செல்லப்படும்.
ஆனால் இந்த முறை பணப் பெட்டியில் இருக்கும் தொகை கூடவும் செய்யலாம், குறையவும் செய்யலாம் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய ட்விட்ஸை கொடுத்துள்ளார் பிக் பாஸ். கடந்த 6 சீசன்களில் இப்படி ஒரு அறிவிப்பு அறிவிக்கப்பட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியின் இறுதிவரை பணப் பெட்டியில் 3.5 லட்சம் இருந்தது.
இப்படி ஒரு நிலையில் பணப்பெட்டியில் ஒரு மர்ம நபரை அனுப்பி 12 லட்சத்தை வைத்து இருக்கிறார் பிக் பாஸ். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அர்ச்சனா குறித்து பேசி இருக்கும் விசித்ரா ‘ ஆரம்பத்தில் ஒரு மாதிரி இருந்த அர்ச்சனா இப்போ அப்படியே மாறிவிட்டார்’ என்று கூறியுள்ளார். இதனால் கடுப்பான அர்ச்சனா ‘ நீங்கள் பேசியதை நினைத்து எனக்கு very Disappointed என்று புலம்பிகொண்டு இருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் விஷ்ணுவை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் இருக்கின்றனர். இதில் மணி, பூர்ணிமா, விஜய் வர்மா ஆகிய மூன்று பேரில் யாராவது ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. எனவே, இந்த பணப்பெட்டியை இந்த மூவரில் யாராவது ஒருவர் எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணப் பெட்டியை யார் எடுத்து செல்லலாம் என்ற உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்டில் தெரிவியுங்கள்.