மக்கள் வாக்கு அடிப்படையில் தான் ஏவிக்சன் நடக்குதா? பிக் பாஸ் சூட்சமத்தை உடைத்த முன்னாள் போட்டியாளர்

0
238
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 94 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-
BiggBoss

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. மிகவும் மொக்கையான டாஸ்க்குகளுடன் நடந்த இந்த Ticket To Finale டாஸ்க்கின் இறுதியில் விஷ்ணு வெற்றி பெற்றார். இந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் துவங்கி இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 7:

இதில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் யார் செல்வார்கள்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும், இன்னும் சில தினங்களிலேயே இந்த நிகழ்ச்சி முடிவடைகிறது. இதில் யார் டைட்டில் வின்னர்? ஆகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பிக் பாஸ் போட்டியாளரான மமதி சாரி கூறி இருப்பது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் எவிக்ஷன் நடக்கிறதா என்று கேட்டால் அப்படியெல்லாம் இல்லை.

மமதி சாரி பேட்டி:

நான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினதே அப்படி எல்லாம் நடந்து வெளியேறவில்லை. நான் முழு மனதுடன் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லவில்லை. எனக்கும் சேனலுக்கும் இடையே ஒப்பந்தங்களில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே சென்ற பின்னும் மற்ற போட்டியாருடன் சகஜமாக விளையாட முடியவில்லை. அதனால் தான் முதலிலேயே வெளியேறி விட்டேன். எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மீது பெரிய அளவில் ஈடுபாடு இல்லை.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சொன்னது;

அதனால் நான் அதை பார்ப்பதுமே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று பலரும் ஆசைப்படுவதற்கு ஒரே காரணம் மக்கள் மத்தியில் பிரபலமடைவதற்காக தான். நேஷனல் சேனல் என்பதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு பலருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும், சில நாட்களாவது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கலாம் என்பதற்காகத் தான் பலருமே நிகழ்ச்சிக்குள் வர நினைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் அவர்கள் தங்களை விளம்பரப்படுத்தி பார்க்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

மமதி சாரி குறித்த தகவல்:

பிரபல பிக்.எப்.எம் ரேடியோ நிலையத்தில் ஆர் ஜேவாக இருந்தவர் மமதி சாரி. பின்னர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஹலோ தமிழகம் ” என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று தமிழகம் மத்தியில் பிரபலமடைந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் மமதி சாரி ரீ என்ட்ரி கொடுத்தார். மக்களின் அபிமானத்தை பெறாத மமதி முதல் வாரத்திலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டார்.

Advertisement