தன் மனைவியை ஹீரோயினாக சொன்ன ரசிகர் – போலீஸ் புகார் வரை கொடுத்துள்ள அஞ்சனாவின் கணவர். ஏன் பாருங்க.

0
1776
anjana
- Advertisement -

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா, சன் ம்யூசிக் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகத்தில் வருவது அஞ்சனா ரங்கன் தான். இவர் தொலைக்காட்சிகளில் வீடியோ ஜாக்கியாக தான் அறிமுகமானர். இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளவர் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன். இவர் சன் ம்யூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

கயல் படத்தில் நடித்த சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு தொகுப்பாளினி அஞ்சனா திருமணம் செய்து கொண்டார். அதோடு இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் ஒரு அழகான ஆண் குழந்தை கூட பிறந்தது.இதனால் இவர் சில ஆண்டுகள் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொகுப்பாளினியாக மீண்டும் கலக்கி வருகிறார்.

இதையும் பாருங்க : ITC ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் இதோ.

- Advertisement -

சமீபத்தில் அஞ்சனாவின் இன்ஸ்டா பக்கத்தில் ஒருவர், நீங்க ஹீரோயினா வரலாமே. உங்கள் கணவர் தான் சினிமாவிலே இல்ல, நீ ஹீரோயினா ஆனா அவருக்கு உதவியா இருக்கும் என்று பதிவிட்டு அஞ்சனா மற்றும் அவரது கணவரை டேக் செய்திருந்தார். அவரின் இந்த கமெண்ட் கால் கடுப்பான கயல் ரங்கன் இந்த நபர் தைரியமாக பல்வேறு அக்கௌன்ட்டை ஆரம்பித்து பல புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்கிறார்.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்து இருக்கிறேன். சென்னை போலீஸ் இதை பார்த்தார்களா ? இதுபோன்ற முகம் தெரியாத நாகரீகம் தெரியாத நபர்களை எண்ணி கவலையாக இருக்கிறது.இவரது வீட்டில் இருக்கும் பெண்களையே இவர் பாலியல் ரீதியாக துன்புறுத்த மாட்டார் என்று நம்புகிறேன். நீ இன்னும் கொஞ்ச நேரத்தில் போலீசில் பிடி படுவாய், நான் உன்னை எச்சரிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

மனைவியை ஹீரோயினாக நடிக்க சொன்னதற்கு ஏன் கயல் ரங்கன் இவ்வளவு டென்ஷன் ஆகி இருக்கிறார் என்பது அவர் பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி மூலம் தெரிய வந்தது. அதில் அந்த நபர் தன் மனைவியை ஹீரோயினாக நடிக்க சொல்லி போட்ட கமெண்ட்டை பார்த்து தான் இவ்வாறு செய்யவில்லை என்றும் அந்த நபர் அஞ்சனாவிற்கு பலமுறை ஆபாசமாக கமெண்ட் செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

Advertisement