அந்த நிகழ்ச்சிக்கு ரீச் இருக்குனு இதெல்லாம் பண்ண முடியாது – குக்கு வித் கோமாளியில் கலந்துகொள்ளாதது குறித்து Vj பார்வதி.

0
19284
parvath
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகிவந்தது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு முன் குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து.இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்தனர். இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 6 மணி நேரம் நடைபெற்ற இறுதி போட்டியில் அணைத்து போட்டியாளர்களும் அணைத்து கோமாளிகளும் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்க : எப்போவ், கர்ணா இங்க பாரு உங்க அக்கா கண்ணபிரான் கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கு – கேலி செய்யும் ரசிகர்கள்.

- Advertisement -

ஆனால், இந்த சீசனில் ஒரு சில எபிசோடுகளுக்கு கோமாளியாக வந்த Vj பவித்ரா மட்டும் வரவில்லை. தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் குக்கு வித் கோமாளி 2வில் கோமாளியாக கலந்துகொண்டார். ஆனால், ஒரு சில எபிசோடுக்குகளுக்கு மட்டும் தான் இவர் வந்தார்.

இருப்பினும் இறுதி போட்டிக்காவது இவர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்நிலையில் இவர் பைனலுக்கு கூட வரவில்லை. இப்படி ஒரு நிலையில் இதற்கான காரணத்தை கூறியுள்ள பார்வதி, நான் டெலிவிஷன் நபர் கிடையாது. என்னால் அடிக்கடி ஜோக், கவுண்டர் எல்லாம் கொடுக்க முடியாது. என்னுடைய விருப்பங்கள் வித்தியாசமானது. ஆனால், உண்மையில் எனக்கு படத்தின் ஷூட்டிங் இருந்ததால் என்னால் போக முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நிகழ்ச்சி பெரும் வரவேற்பு இருக்கிறது என்பதற்காக நாம் ஏதோ செய்ய கட்டாயப்படுத்த கூடாது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement