ரம்யா இன்ஸ்பிரேஷனால் இத்தனை கிலோ குறைத்துள்ளேன். புகைப்படத்தை பதிவிட்ட மாஸ்டர் பிரபலம்.

0
5248
Ramya
- Advertisement -

தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான தொகுப்பாளர்களுள் ரம்யாவும் ஒருவர். இவர் முதன் முதலாக விஜே வாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் பிரபல தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சியை கூட தொகுத்து வழங்கி வருகிறார். பின் தொகுப்பாளினி ரம்யா, அப்ரஜீத் என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களது திருமணம் முழுமையாக ஓராண்டு கூட நீடிக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்கள்.

-விளம்பரம்-
Image result for vj ramya workout

பின்னர் இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த ரம்யா 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

- Advertisement -

இறுதியாக ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், நடிகை ரம்யா அவர்கள் எப்போதும் தன்னுடைய ஃபிட்னஸ் விஷயத்தில் கண்டிப்பாக இருப்பார். இவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டும், தன்னுடைய உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்தியும் வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை பதிவிட்டு உள்ளார்.

இதை பார்த்து இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் லைக் செய்தும், பாலோ செய்தும் வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ரம்யா உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பார்த்த இயக்குநரும், எழுத்தாளருமான ரத்தினகுமார் அவர்கள் இன்ஸ்பிரேஷன் ஆகியுள்ளார். கடந்த ஆண்டு அமலா பால் நடிப்பில் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்திய படம் தான் ஆடை. இந்த படத்தை இயக்கியவர் தான் ரத்தினகுமார்.

-விளம்பரம்-

இந்த படம் மக்கள் மத்தியில் விமர்சனங்களை தெரிவித்தாலும் பாராட்டுகளையும் பெற்றது. தற்போது இவர் மாஸ்டர் படத்தில் துணை எழுத்தாளராகவும், வசனகர்த்தாவும் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி எடுத்து கொண்ட புகைப்படத்தையும், இந்த வருடம் மார்ச் 15 ஆம் தேதி அதாவது மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்து பலரும் அதிர்ந்து போனார்கள். ஏன்னா, இவர் கிட்டத்தட்ட 5 மாதத்தில் 18 கிலோ வரை தன்னுடைய உடல் எடையை குறைத்திருக்கிறார். இதற்கெல்லாம் முழுக்க முழுக்க விஜே ரம்யாவின் இன்ஸ்பிரேஷன் தான் என்றும் கூறியிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் விஜே ரம்யா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement