ஓமக்குச்சிக்கு தனது படத்தில் நீதிபதி கதாபாத்திரம் கொடுத்த தயாரிப்பாளர். அதுவும் 80ஸ் ரசிகர்களின் கனவுக்கன்னி.

0
306
- Advertisement -

அந்த நடிகருக்கு அப்படி ஒரு ரோல் யாரும் தந்ததில்லை. எத்தனை பெரிய மனது அந்த தயாரிப்பாளருக்கு. அதுவும் ஒரு நீதிபதியின்வேடத்துக்கு. தன் மெலிந்த உடலை வைத்து காமெடி காட்சிகள் தான் எடுப்பார்கள் என அவருக்குத் தெரியும். அவரை நிற்க வைத்து டேபிள் ஃபேனை திருப்பி விட்டு காற்றில் பறந்து விடுவது போலக்கூட காட்சி வைத்திருக்கிறார்கள். எத்தனை பெரிய மனது அந்த தயாரிப்பாளருக்கு நீதிபதி வேடத்தை தர…

-விளம்பரம்-

ஓமக்குச்சி நரசிம்மன் சினிமாவுக்கு வரும் முன் நாடகத்தில் நடித்தார். ‘நாரதரும் நான்கு திருடர்களும்’ என்கிற நாடகத்தில் ஒரு கராத்தே மாஸ்டர் வேடம் அவருக்கு. ஜப்பானிய கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை வைத்து எழுத நரசிம்மனோ அதை ‘ஓமக்குச்சி’ ஆக்கி விட்டார். குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் ஓமக்குச்சி விசுவை பார்த்து சாப்பிட்டாச்சான்னு கேட்பார். சாப்பிட்டுட்டு சாப்பிடலைன்னு சொன்னா சாப்பாடு வாங்கித்தரப்போறியா..இல்லை…ன்னு விசு ஒரு குழப்பல் போடுவார். ஓமக்குச்சி தலைசுற்றி ஓடிவிடுவார்.

- Advertisement -

அடுத்த காட்சியில் விசு ‘சாப்பிட்டியா’ன்னு கேட்டதும் “பதிலுக்கு சாப்ட்டியான்னு கேட்கமாட்டேனே”ன்னு சொல்லிட்டு “பைத்தியக்கார ஆஸ்பத்திரில வேலை செய்யற டாக்டருக்கு உடம்பு சரியில்லை”ன்னு சொல்லி மாட்டிக்குவார். உடனே விசு ‘பைத்தியக்கார ஆஸ்பத்திரில வேலை பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார…” ஆரம்பிச்சு தொணதொணப்பார். ஓமக்குச்சி தலையை பிய்த்துக்கொண்டு ஓடி விடுவார்.

சூரியன் படத்தில் கவுண்டமணி புதைசேற்றில் மாட்டிக்கொள்வார். கவுண்டமணி விழுந்ததும் ஜாங்குசக்கு ஜஜக்குஜக்குன்னு ஓமக்குச்சி பாடிட்டு போவார்…செம… பல படங்களில் ஓமக்குச்சியின் காமெடி வயிறு வலிக்க செய்யும். கவுண்டமணி ஒரு ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்திருப்பார். ஓமக்குச்சி அங்கே வந்து “எச்சூஸ்மி…ஸ்கோர் என்ன?…ரேடியா இல்லைல்லா….கன்ட்ரி வில்லேஜ்…”ன்னு அவர் பேசுவதும் கவுண்டமணி தலைமுடியை பிடித்து அடிப்பதும்….

-விளம்பரம்-

இப்படி காமெடியாகவே நடித்த ஓமக்குச்சி கடைசியாக நடித்த படம் தலைநகரம். அதில் வடிவேலுவை ஹீரோ மாதிரி போஸ் கொடுக்கச் சொல்வார் மயில்சாமி. அப்போது வடிவேலு எல்லாவற்றையும் உடைப்பார். அருகே நிற்கும் ஓமக்குச்சியை தலைக்கு மேலே சுற்றிகீழே போடுவார். அதில் ஓமக்குச்சி தலை சாய்ந்தது விடும்…நன்றாக ரசிக்கப்பட்ட அந்தக்காமெடி தான் கடைசி…அதோடு உடல்நலமில்லாமல் இரண்டு வருடத்தில் இறந்து போனார் நரசிம்மன். நரசிம்மன்-கவுண்டமணி அட்டகாசமான காம்பினேஷன்.

என்றாலும் அவருக்கு அழகான அறிவுப்பூர்வமான பாத்திரமாக நீதிபதி பாத்திரம் தெலுங்கில் கிடைத்தது. சில காட்சிகள் தான். ஆனால் ஓமக்குச்சிக்கு அது பெரிய பாத்திரம் தானே. பிரேமின்ச்சி சூடு என்கிற அந்தத் தெலுங்குப்படத்தின் தயாரிப்பாளரும் இதேப்போல நல்ல பாத்திரங்களுக்கு ஏங்கியவர் தான். தனக்கு கிடைக்காததை தானே உருவாக்கலாம் என இந்தப்படத்தை தயாரித்து நடித்தார். ராஜேந்திரபிரசாத், சந்திரமோகன், கோட்டா சீனிவாசராவ், போன்றோருடன் நாயகியாக நடித்த அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு நடிகை. ஆம்….சில்க் ஸ்மிதா தான் அவர்…..

Advertisement