பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இர்பான் நடத்திய Gender Reveal பார்ட்டி. வீடியோவிற்கு கீழ் குவியும் கமெண்ட்ஸ்.

0
230
- Advertisement -

குக் வித் கோமாளி பிரபலம் இர்ஃபான் சட்டவிரோதமாக செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம். இவர் பல ஊர்களுக்கு சென்று பல ஓட்டல்களில் சாப்பிட்டு அதற்கான கருத்துக்களை போடுவார். மேலும், இவர் எப்போதும் அரை டவுசர் போட்டுக்கொண்டு தான் சந்து கடை முதல் வெளிநாடுகள் உள்ள காட்ஸ்லி ஹோட்டல் வரை சென்று உணவை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ போடுவார். இதன் மூலம் இவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

பின் இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் ஆனது. மேலும், இரப்பான் சினிமா பிரபலங்கள் உடன் உணவு சாப்பிட்டு பேட்டி எடுத்து வருகிறார்கள். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 5:

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வித் முடிவடைந்து இருந்தது. இதனை அடுத்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இர்ப்பான் சிறப்பாக சமைத்து வருகிறார்.

-விளம்பரம்-

இர்பான் செய்த வேலை:

இதனிடையே இர்பான் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் தான் இவருடைய மனைவியின் வளைகாப்பு நடைபெற்றது. மேலும், இர்ப்பான் தன்னுடைய மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்பதை ஆவலுடன் தெரிந்து கொள்ள இருப்பதாக கூறி இருந்தார். இந்தியாவில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்கு தடை விதித்ததால் இர்பான் துபாய்க்கு தன்னுடைய மனைவியை அழைத்து சென்றிருக்கிறார்.

குவியும் வாழ்த்துக்கள்:

அவர் அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிய வந்திருக்கிறது. இதை இவர் கொண்டாடும் விதமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் பார்ட்டி வைத்திருக்கிறார். இந்த பார்ட்டியில் பிக் பாஸ் மாயா கலந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தனக்கு பிறக்கப் போவது பெண் குழந்தை என்று மகிழ்ச்சியுடன் இர்ப்பான் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

Advertisement