போன வருஷம் சமந்தாவை கேலி செஞ்சார், இப்போ ‘தளபதி 65’ படத்துல விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் முகமூடி பட நடிகை.

0
1800
pooja
- Advertisement -

தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முகமூடி’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படமாம். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.ஹெக்டே

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-108.jpg

இதனால் டக்கென தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் பூஜா ஹெக்டே. 2014-ஆம் ஆண்டு ‘ஒக்க லைலா கோஷம்’ என்ற படம் டோலிவுட்டில் வெளியானது. அதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.இவர் அல்லு அர்ஜுனாவுடன் இவர் இணைந்து நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற தெலுங்கு படம் வெளிவந்து மெகா ஹிட்டானது.

இதையும் பாருங்க : விஸ்வாசம் படத்தை போல மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து வாழும் பாலா – விஸ்வாசம் அஜித் மாதிரியே ஆகிட்டார் பாவம்.

- Advertisement -

அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இப்படி ஒரு நிலையில் இவருக்கு தளபதி 65 படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் இருந்தது. பூஜா ஹேக்டே தெலுங்கில் பிரபலமான போது சமந்தா குறித்து போட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

This image has an empty alt attribute; its file name is image-50.png

கடந்த ஆண்டு மே மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர், சமந்தாவின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘ எனக்கு ஒன்றும் இவர் எந்த விதத்திலும் அழகா தெரியவில்லை’ என்று பதிவிட்டிருந்தார்.நடிகை பூஜா ஹெக்டேவின் இந்த பதிவு சமந்தா ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஆனால், நடிகை பூஜா ஹெக்டே, தனது சமூக வலைதளபக்கம் ஹேக் செய்யப்பட்டது. அதனால் அதில் வரும் பதிவுகளை கண்டு கொள்ளாதீர்கள் என்று பதிவு ஒன்றை செய்திருந்தார். இந்த பதிவை போட்ட அரை மணி நேரத்தில், தனது இன்ஸ்டகிராம் கணக்கு சரி செய்யபட்டுவிட்டது என்று கூறி அந்தர் பல்டி அடித்துவிட்டார் பூஜா ஹெக்டே

-விளம்பரம்-
Advertisement