இன்றைய ப்ரோமோவில் கவினிடம் பேசிய கீர்த்திகா யாரு.!

0
6658
Kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் தான் ஒரு பிலே பாய் போல சுற்று திரிந்து வருகிறார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அபிராமி, சாக்க்ஷி,லாஸ்லியாவிடம் இவர் விடும் ஜொள்ளைக் கண்டு கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிளே பாய் என்ற பெயரை பெற்ற மஹத்தே தேவலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளார் கவின்.

-விளம்பரம்-

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் கமலிடம் பெண் அழைப்பாளர் ஒருவர் போனில் பேசுகிறார். அப்போது அவரிடம் நீங்கள் யாரிடம் பேச விரும்புகிறீர்கள் என்று கமல் கேட்க அந்த பெண்ணோ எனக்கு கவினிடம் பேச வேண்டும் என்று கூறுகிறார். பின்னர் கவினிடம் நான்கு பெண்ணில் நீங்கள் யாரை உண்மையாக காதலிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்.

இதையும் பாருங்க : மங்காத்தா பட நடிகருக்கு குழந்தை பிறந்தது.! அதுவும் இப்படி ஒரு நாளில்.! 

- Advertisement -

அதற்கு கவினோ, ஒரு வீடுன்னு இருந்தா எல்லாரும் விளையாடுவாங்க, ஒரு மாமா பொண்ணு கிட்ட எப்படி விளையாடுவாங்களோ அப்படி தான் இங்கேயும் இருகேன் என்று கூறுகிறார். அதற்கு கமலோ, உங்களுக்கு கீர்த்திகா என்ற பெயரில் மாமா பொண்ணோ அத்தை பொன்னோ இல்லையே என்று கிண்டலடித்தார்.

கவின் மற்றும் கமல் பேசியதை வைத்து பார்க்கும் போது கவினிடம் பேசிய அந்த கீர்த்திகா, கவினின் தெரிந்த பெண்ணாக கூட இருக்கலாம். ஏனெனில் எப்போதும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களிடம் அவர்களின் உறவினர்களோ, நண்பர்கள் போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம்.

-விளம்பரம்-

அந்த வகையில் இன்று கவினிடம் பேசிய கீர்த்திகா கவினுக்கு தெரிந்தவராகவோ இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.ஒரு வேலை கவினை கலாய்ப்பதர்க்காக அந்த பெண் வேறு பெயரில் கூட பேசி இருக்கலாம் என்று தான் எண்ணம் தோன்றுகிறது. அது யார் என்பதை இன்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement