அஜித், நயன்தாரா அக்ரீமெண்ட் இது தானா? தயாரிப்பாளர் சொன்ன ரகசியம்.

0
16648
ajithnayanthara
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். இவரை ரசிகர்கள் செல்லமாக ‘தல’ என்று தான் அழைப்பார்கள். தல அஜித் அவர்கள் சினிமா திரை உலகில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தல அஜித் எப்போதுமே அதிகமாக தமிழ் படங்களில் தான் நடிப்பார். இந்த வருடம் வெளிவந்த தல அஜித்தின் ‘விசுவாசம், நேர்கொண்ட பார்வை’ படம் ரசிகர்களிடையேயும், மக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் இந்த படங்கள் நல்ல வசூலை பெற்றுத் தந்தது.

Image result for ajith nayanthara

இந்நிலையில் தல அஜித்தின் அடுத்த படமான “வலிமை ” படம் உருவாகிக் கொண்டுள்ளது. பொதுவாகவே தல அஜித் அவர்கள் எப்போதுமே ஆடியோ லான்ச், படம் ப்ரோமோஷன், சக்சஸ் மீட் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவே மாட்டார். இது எல்லாருக்குமே தெரிந்த விஷயம் தான். இதுமட்டும் இல்லாமல் அஜித் அவர்கள் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும்,சினிமா துறை நடத்தும் அவார்ட் நிகழ்ச்சிகளிலும் கூட கலந்து கொள்ள மாட்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : எங்கள் உறவு இப்படி தான் ஆரம்பித்தது . அன்வர் பிறந்தநாளில் வாட்ஸ் அப் மெஸேஜை பகிர்ந்த சமீரா.

அஜித்தை போல நடிகைகளில் நயன்தாரா கூட இசை வெளியீட்டு விழா, பொது நிகழ்ச்சிகள் என்று எதுவும் கலந்து கொள்வது இல்லை. சமீபத்தில் பேட்டி ஒன்றில் விளக்கமளித்த சிவா, நயன்தாரா அக்ரீமென்ட் போடும் போதே என்னுடைய ப்ரைவேசி மற்றும் பாதுகாப்பு காரணத்திற்காக நான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதை ஒப்புக்கொண்டு தான் அவரை ஒப்பந்தம் செய்கிறார்கள். அதே போல தான் அஜித்தும்.

-விளம்பரம்-

நயன்தாரா ப்ரோமோஷனுக்கு வந்து தான் அது நயன்தாராவின் படம் என்று தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. நயன்தாரா என்ற அந்த பெயர் ஒன்று போதும். ஆனால், திரிஷாவிற்கு அந்த பெயர் என்னும் வரவில்லை. எனவே, அந்த லெவலுக்கு ரீச் ஆனதுக்கு அப்புறம் நீங்கள் அது போல செய்யுங்க. தலையா இருக்கும் போது தலையாட்டலாம். ஆனால், வாலா இருக்கும் போது அது முடியுமா என்று கூறியுள்ளார் சிவா.

Advertisement