கன்னடத்தின் குக்கு வித் கோமாளியையில் வெங்கடேஷ் பத் சென்ற நிலையில் தாமு செல்லாததற்க்கு காரணம் இது தானாம்.

0
5725
cooku
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-17.png

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. செம ஜாலியாக சென்று கொண்டு இருந்த இந்த சீசன் விரைவில் நிறைவடைய இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து.இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்தனர்.

இதையும் பாருங்க : ஒரு பஸ்ஸுக்கு இவ்ளோ பிரச்சனையாடா – கர்ணன் படத்திற்கு ப்ளூ சட்டையின் விமர்சனம். வீடியோ இதோ.

- Advertisement -

இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.தற்போது இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியை அடித்துக்கொள்ள வேறு எந்த தொலைக்காட்சியிலும் ரியாலிட்டி நிகழ்ச்சி இல்லை. இப்படி ஒரு நிலையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை கன்னடத்தில் ரீ -மேக் செய்துள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு குக்கு வித் கிறுக்கு என்று பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பத் கலந்து கொண்டு இருந்தார்.

ஆனால், மற்றொரு நடுவரான தாமு கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து கூறியுள்ள அவர், வெங்கடேஷ் கன்னட ரீமேக்லயும் இருக்காரு, நீங்க அங்க இல்லையா?’னு பல ரசிகர்கள் கேக்குறாங்க. வெங்கடேஷ் கர்நாடகாவை சேர்ந்தவர். எனக்கும் கன்னட மொழி தெரியும். ஆனா, எனக்கு கால் வரலை. ஒருவேளை கூப்பிட்டிருந்தா நிச்சயம் போயிருப்பேன். என்று கூறியுள்ளார் தாமு.

-விளம்பரம்-
Advertisement