சிம்புவிற்கு ஏன் டாக்டர் பட்டம் ? கேலி செய்த்தவர்களுக்கு ஐசரி கணேசன் கொடுத்த விளக்கம்.

0
502
simbu
- Advertisement -

‘இதனால் தான் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்தோம்’ என்று ஐசரி கணேஷ் அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. நடுவில் சிம்புவின் சில படங்கள் தோல்வி அடைந்து இருந்தாலும் செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர்.

-விளம்பரம்-

அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வந்த மாநாடு படம் பல தடைகளை கடந்து வெளியாகி இருந்தது. மாநாடு படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த படத்தை பிரபு காமாட்சி தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

மாநாடு படம்:

யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். படத்தில் சிம்பு மிரட்டி இருக்கிறார். அதோடு நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி இருந்தார்கள். மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் இந்த விழா நடந்தது. மேலும், டாக்டர் பட்டத்தை சிம்புவுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வழங்கி இருந்தார்.

Simbu

சிம்பு வாங்கிய டாக்டர் பட்டம்:

டாக்டர் பட்டம் வாங்கிய சிம்பு தந்தை டி ஆர் ராஜேந்திரன் மற்றும் தாயிடம் ஆசீர்வாதம் வாங்கி இருந்தார்.
அந்த புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதை பார்த்து சிம்புவின் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்ததற்கான காரணத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, 1992ல் தான் எங்களுடைய வேல்ஸ் யுனிவர்சிட்டி தொடங்கப்பட்டது. தொடங்கி கிட்டத்தட்ட 31 வருடம் ஆகிவிட்டது.

-விளம்பரம்-

ஐசரி கணேஷ் அளித்த பேட்டி:

எங்களுக்கு 43 கிளைகள் இருக்கு. அதில் 40ஆயிரம் மாணவர்களுக்கு மேல் படித்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை நாங்கள் சினிமாவில் சத்யராஜ், நாசர், விவேக் என பல பேருக்கு பட்டம் கொடுத்து இருக்கிறோம். இதற்கென ஒரு ஏழு பேர் கொண்ட குழு இருக்கிறது. இவர்கள் தான் டாக்டர் பட்டம் யாருக்கு கொடுக்கணும் என்று முடிவு செய்வார்கள். அப்படித்தான் சிம்பு பெயரை டாக்டர் பட்டத்திற்கு பரிசிலனை செய்தார்கள். என் மகள் என்னிடம் சொன்ன போது, ‘எதுக்கு சிம்புக்கு கொடுக்க வேண்டும்’ என்று கேட்டேன். ஆறு வயதிலிருந்தே சினிமாவில் எல்லா துறையிலும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் நல்லா இருக்கும் என்று சொன்னார்கள். பின் எனக்கும் சரி என்றுப்பட்டது.

பட்டம் கொடுத்ததற்கு விளக்கம் கொடுத்த ஐசரி கணேஷ்:

அதேபோல் தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்து பன்முகத் திறமைகள் இருக்கும் நபர் சிம்பு. முதலில் இதை சிம்பு கிட்ட சொன்னப்போது அதிர்ச்சியாகி விட்டார். அப்புறம் ‘என்ன சொல்றீங்க’? என்று கேட்டார். எங்க குழு தான் முடிவு பண்ணினார்கள். நீங்கள் ஏற்றுக் கொள்ளனும் என்று சொன்னேன். அவரும் சரி என்று சொன்னார். அடுத்தது டி ராஜேந்திரன் சாருக்கு போன் பண்ணி இதைப் பற்றி சொன்னோம். அவரும் ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் சிம்புக்கு டாக்டர் பட்டம் கொடுத்த போது டி ராஜேந்திரன் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார். சிம்புவுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement