தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடலாசிரியர்களில் நா.முத்துக்குமாரும் ஒருவர் ஆவார். இவர் திரைப்பட பாடலாசியர் மட்டுமில்லாமல் கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகம் கொண்டவர். இவரின் கவிதைகள் படிக்காத பாமரனுக்கும் புரியும் அளவிற்கு எளிமை கொண்டவை. இவர் சினிமா உலகில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் திரைத்துறைக்கு வந்தார். பின் தன் கவிதைகளால் ரசிகர்களை கவர்ந்தார். இதுவரை சுமார் 1,500 திரைப்பட பாடல்களை எழுதியவர். அதுமட்டும் இல்லாமல் இவர் தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன் போன்ற பல கவிதைகளின் தொகுப்புகளையும் விற்பவன் என்ற நாவலையும் எழுதி உள்ளார்.
மேலும், இவர் படங்களில் பாடல் எழுதியதற்காக இரண்டு தேசிய விருதுகளை வாங்கி உள்ளார். நா.முத்துக்குமார் அவர்கள் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு ஜீவலட்சுமி என்ற மனைவியும், ஆதவன் என்ற மகனும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவரின் இழப்பு ஒட்டுமொத்த திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் எழுதும் பாடல்களுக்கான ஊதியத்தை முத்துக்குமாரின் குடும்பத்திற்கு வழங்கி வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினால் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடித்த படங்கள்:
அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் கோடிகளில் வசூலை குவித்து இருந்தது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தன் பாடல்களுக்கான ஊதியத்தை முத்துக்குமாரின் குடும்பத்திற்கு வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
நா. முத்துக்குமாரின் குடும்பத்திற்கு சிவா செய்த உதவி:
கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயசு பாடலை முதன் முதலாக சிவகார்த்திகேயன் எழுதினார். அதற்கு பிறகு டாக்டர் படத்தில் அனைத்து பாடல்களையும் சிவகார்த்திகேயன் எழுதினார். தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும், விஜய்யின் பீஸ்ட் படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளார். இப்படி சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் முழுவதும் வரும் சம்பளத்தை நா. முத்துக்குமாரின் குடும்பத்திற்கு கொடுத்து வருகிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் சிவகார்த்திகேயனை வாழ்த்தி வருகிறார்கள்.
சிவகார்த்திகேயன் உதவ காரணம் :
இதற்க்கு முக்கிய காரணமே கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நா முத்து குமார் எழுதிய ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ பாடல். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தந்தை இறந்த பின்னரே இந்த பாடல் வரும். நிஜயத்திலும் சிவகார்திகேயன் சிறு வயதிலேயே தந்தையே இழந்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனாலேயே அந்த பாடல் சிவகார்த்திகேயனுக்கு மிக நெருக்கமான ஒரு பாடலாக அமைந்தது. அந்த நன்றிக்கடனுக்காகவே சிவகார்த்திகேயன், நா முத்து குமார் குடும்பத்திற்கு இந்த உதவியை செய்து வருகிறார்.