எதுக்கு சார் இப்படி பண்றீங்க, நானும் தான் ஒழச்சி இருக்கேன், வாக்குவாதம் செய்த நடிகை, தடுத்த கே.ராஜன்.

0
229
- Advertisement -

நடிகை சாய் பிரியாவின் குடும்பம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக சினிமாத்துறையில் இருந்து வருகின்றனர். சாய் பிரியாவின் தத்தா வி.ஜே பரமசிவ முதலியார் தமிழ் நாட்டின் முதல் திரையரங்கான “முருகன் டாக்கீஸ்” என்ற திரையரங்கின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வழியில் வந்த நடிகை சாய் பிரியா தொடக்கத்தில் மாடல் நடிகையாக தன்னை தயார் படுத்திகொண்டு கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் நடித்திருந்த “சிவ லிங்க” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக்கினார் .

-விளம்பரம்-

காமெடி, ஹாரர் கதையில் உருவான இப்படத்தை ஆர் ரவீந்தர் தயாரிப்பில் பிரபல இயக்குனரான பி.வாசு இயக்கியிருந்தார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ரித்திகா சிங், ஊர்வசி, பானுபிரியா போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படமான பெரிய ஹிட் அடிக்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியது. இப்படத்தை தொடர்ந்து நடிகை சாய் பிரியா நடிகர் தோவினோ தாமஸ் நடித்திருந்த “என்ட உம்மாட்டி பேரு” என்ற மலையாளம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

பாம்பாட்டம் படம் :

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியிருந்தார் “யுத்த சத்தம்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் சாய் பிரியா. மேலும் இப்படத்தில் கெளதம் கார்த்தி மற்றும் பார்த்திபன் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில் வெளியாகவிருக்கு “பாம்பாட்டம்” என்ற திரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகை சாய் பிரியா. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியானது நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

என்னை ஏன் ஒதுக்குறீங்க :

இப்படியிருக்கும் போது நிகழ்ச்சியில் பேசிய நடிகை சாய் பிரியா, தன்னை ஏன் தனிமை படுத்துகிறீர்கள். என்னை இப்படத்தின் கதாநாயகி என்று சொல்லித்தானே படத்தில் நடிக்க அழைத்தீர்கள் ஆனால் தற்போது என்னை முக்கிய கதாபத்திரம் என்று சொல்கிறீர்கள். அது எனக்கு ஏன் என்று புரியவில்லை. என்னுடைய பெயர் திரைப்படம் தொடர்பான பல இடங்களில் விடுபட்டுள்ளது அது ஏன் என்று? படத்தின் இயக்குனரான வடிவுடையானிடம் அந்த செய்தியாளர் சந்திப்பில் கேட்டார் சாய் பிரியா.

-விளம்பரம்-

தயாரிப்பாளரை சரமாரி கேள்வி கேட்ட சாய் பிரியா :

தொடர்ந்து பேசிய நடிகை சாய் பிரியா இயக்குனரிடம் உங்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லை, நான் சொல்வது சரிதானா?? உங்கள் கோபத்தை மற்றவர்கள் மீது காட்ட முடியாமால் சிலரின் மீது காட்டாதீர்கள். இந்தப் படத்துக்காக நானும் இரவு பகலாக உழைத்திருக்கிறேன், எனவே நீங்கள் அந்த உழைப்புக்கு மதிப்பளிக்க வேண்டும். ஏனென்றால் நானும் பல பெரிய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன் எனவே படத்தினை தயாரிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்” என்று ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் முன்னிலையில் படத் தயாரிப்பாளரிடம் சாய் ப்ரியா கூறினார்.

https://www.youtube.com/watch?v=e1N-3O21gIM&t=40s

தமிழில் பேசிய நடிகை :

மேலும் இந்த நிகழ்ச்சியில் கொஞ்சும் தமிழில் தமிழ் மொழியின் மகத்துவத்தையும் பெருமையையும் பற்றி சாய் பிரியா பேசியது செய்தியாளர்களின் கவனத்தை ஈர்த்து. மேலும் படத்தின் இயக்குனர் மாற்று தயாரிப்பாளர்களிடமே இப்படி தைரியமாக தன்னுடைய கருத்தை எடுத்து வைத்த சாய் பிரியாவை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement