கரோனா மருந்தை கெத்தாக வானத்தில் தூவும் தக்ஷா விமானம். அஜித்துக்கு என்ன சம்மந்தம் என்று கேட்போருக்கு பதில் இதோ.கொரோனா

0
4112
daksha
- Advertisement -

காட்டுத் தீயாய் விட வேகமாக இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் 1000 பேருக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது. இந்த கொரோனா வைரஸினால் .இதுவரை 26 பேர் உயிர் இழந்து உள்ளனர். இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

-விளம்பரம்-

இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிக காய்ச்சல், அதிக இருமல், மூச்சுத்திணறல் இவையெல்லாம் தான் கொரோனா வைரஸின் அறிகுறிகள். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதையும் பாருங்க : சூரி பசங்களா இது.என்ன இப்படி வளர்ந்துட்டாங்க. சூரி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ.

- Advertisement -

சென்னை மாநகராட்சியின் சார்பில் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க 200 வார்டுகளிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்க பவர் பிரையர் உட்பட 500 இயந்திரங்களை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு அலுவலர்கள் உட்பட பெரிய பெரிய கட்டிடங்களில் 75 ஜெட்ராடிங் எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன.

வீடியோவில் 15 நிமிடத்திற்கு மேல் பார்க்கவும்

இந்த எந்திரம் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்டது. இந்த எந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கிருமிநாசினி தெளிக்க இயலும். இதுபோன்று அண்ணா பல்கலைக் கழகத்திடம் நான்கு ட்ரோன் எந்திரங்கள் உள்ளன என்று மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த ட்ரோன் கண்டுபிடித்தலில் நம்ப தல அஜித் பங்கும் உள்ளது.

இதையும் பாருங்க : மற்ற நடிகைகளை போல ஒர்க் அவுட் வீடீயோவை வெளியிட்ட பகல் நிலவு சமீரா.

-விளம்பரம்-

இதுகுறித்து தக்ஷா குழுவின் செந்தில் குமார் என்பவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில்,அஜித்துக்கு இந்த குழுவுக்கு என்ன சம்மந்தம் என்று கேட்கப்பட்டதர்க்கு, எங்கள் டீம் தக்ஷாவிற்கு நிறைய உதவிகளை செய்திருக்கார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் அவர் எங்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். எங்கள் குழுவில் அவர் இப்போதும் இருக்கிறார். தேவைபட்டால் அவரின் உதவியை கேட்போம்.

Advertisement