மீண்டும் அப்படி நடிக்க மாட்டேன். ரசிகர்களுக்கு வடிவேலு கொடுத்த ஷாக். வீடியோ இதோ

0
3253
Vadivelu
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர்தான் வடிவேலுக்கு தலைவலி ஏற்பட்து . வடிவேலு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்கள். இந்த படத்தையும் ஷங்கர் தான் தயாரித்து வந்தார்.

-விளம்பரம்-
vadivelu

ஆனால், வடிவேலு அவர்கள் நான் இந்த படத்தில் நடிக்கமாட்டேன். அப்படி நான் நடிக்க இருந்தால் பெரிய நடிகர்களின் பட்டாலும் இருக்கக்கூடாது மற்றும் எனது ஆடை வடிவமைப்பாளரை நான் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் பல விதிமுறைகளை விதித்தார். இதனால் ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூட சொல்லலாம், மேலும் இந்த படம் அப்படியே முடங்கி விட்டது. இதனால் வடிவேலு மீது பயங்கர கோபத்துடன் இருந்தார் சங்கர்.

- Advertisement -

இதையும் பாருங்க : பிரபல நடிகரின் மகனுடன் தனியாக யாஷிகா டேட்டிங்? வைரலாகும் புகைப்படம்.

இதையடுத்து படத்தில் தான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. படத்தை முடித்து தரும்படியும் இல்லையேல் வடிவேலுவால் ஏற்பட்ட 9 கோடி ருபாய் நஷ்டத் தொகை தரும்படியும் பட குழுவினர் புகார் அளித்துள்ளனர். ஆனால், பணத்தை திரும்ப தர மறுத்ததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது.மேலும், அவரை யாரும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டது.

-விளம்பரம்-

வீடியோவில் 6: 49 நிமிடத்தில் பார்க்கவும்

சமீபத்தில் நடிகர் வடிவேலு திருச்செந்தூரில் உள்ள கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் தரிசனத்திற்கு சென்றிருந்தார். சுவாமி தரிசனத்தை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த வடிவேலுவிடம் ரஜினி பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த வடிவேலு ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவருக்கும் தெரியாது ரசிகர்களுக்கும் தெரியாது வேறு யாருக்கும் தெரியாது. இருப்பினும் அவர் முதலமைச்சர் பதவிக்கு வராமல் வேறு ஒருவரை முதலமைச்சராக நியமிப்பேன் என்று கூறியது மிகப்பெரிய விஷயம் என்று கூறி இருந்தார்.

மேலும், தான் சினிமாவில் மீண்டும் வருவது ஆண்டவன் கையில் தான் இருக்கிறது.அவரை தவிர வேறு யாரும் தடுக்க முடியாது என்று கூறிய வடிவேலு, 2021ல் நானும் முதலமைச்சருக்கு கூட்டமைப்பின் முதலமைச்சர் ஆகி விடுகிறேன் 2021ல் நான் தான் முதலமைச்சர் என்று தனது பாணியில் கிண்டலாக சொல்லிவிட்டு கிளம்பினார் வடிவேலு. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வடிவேலு தனது கம் பேக் குறித்து பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், வடிவேலுவுடைய வேலை ஜனங்களை சிரிக்க வைப்பது எனவே, அவன படம், கோவண படம் எல்லாம் கிடையாது. இன்னொன்றை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இனிமேல் நான் ஹீரோவாக நடிக்க மாட்டேன், ஹீரோவுடன் தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே நடிகர் வடிவேலு, மிஸ்கின் இயக்க போகும் படத்தில் நடிக்க போகிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement