மக்கர் செய்துள்ள ஹைட்ராலிக் கதவு. ஷூட்டிங்கிற்கு தாமதமானதால் ராக் என்ன செய்துள்ளார் பாருங்க.வீடியோ இதோ.

0
1143
Dwayne-Johnson
- Advertisement -

90 களில் wwe மூலம் ரசிகர்கள் மனதில் பல நபர்கள் இடம் பிடித்தாலும் அதில் ராக் என்னும் டுவேயின் ஜான்சன் என்பவரை கண்டிப்பாக மறக்க முடியாது WWE மூலம் ஜான் சீனா, ஸ்டோன் கோல்ட், கோல்டுபர்க் என்று பல வீரர்கள் சினிமாவில் கால் பதித்தனர், ஆனால், ராக் அளவிற்கு யாரும் பபுகழை அடையவில்லை. நடிகர் ராக் 1999 ஆம் ஆண்டு வெளியான ” படத்தின் மூலம் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இவருக்கு உலக அளவில் பெயர் எடுத்து கொடுத்தது தி மம்மி ரிட்டர்ன்ஸ் என்ற படம் தான்.

-விளம்பரம்-

அந்த படத்தில் ஸ்கார்பியன் கிங் என்ற கதாபாத்திரத்தில் நைத்து இருந்தார். அப்போதே அமெரிக்கா டாலர் மதிப்பில் 5.5 மில்லியன் சம்பளமாக பெற்ற அறிமுக நடிகர் இவர் மட்டும் தான். அதன் பின்னர் ஸ்கார்பியன் கிங், ஹெர்குலஸ், பாஸ்ட் அண்ட் பியூரியஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ராக் என்று சொன்னதும் நம் நினைவிற்கு முதலில் வருவது அவரது கட்டுமஸ்தான உடல் தான்.

- Advertisement -

படங்களில் இவர் பலாசாலியாக காண்பித்து பல காட்சிகள் வந்துள்ளது. ஆனால், இவர் நிஜத்திலும் தான் ஒரு பலசாலி என்பதை நிரூபித்து உள்ளார். சமீபத்தில் நடிகர் ராக், ஷூட்டிங்கிற்கு தாமதம் ஆனதால் மக்கர் செய்த தனது வீட்டின் இருப்பு கதவை தும்சம் செய்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், சமீபத்தில் ஏற்பட்ட புயலின் காரணமாக வும் வீட்டில் மின்சார வசதி துண்டிக்கப்பட்டதாலும் வீட்டின் கதவில் இருக்கும் ஹைட்ராலிக் சிஸ்டம் வேலை செய்யாமல் போய்விட்டது. இதனால் நான் படப்பிடிப்புக்கு செல்ல முடியாமல் 45 நிமிடங்கள் காத்திருந்தேன்.

ஆனால் எனக்காக அங்கே ஒரு குழுவினர் காத்துக் கொண்டிருந்தார்கள் இதனால் அந்த கதவை தள்ளி இழுத்து பின்னர் அதனை உடைத்து போட்டு விட்டேன். அதன்பின்னர் என்னுடைய பாதுகாவலர்கள் வந்து மீதமுள்ள கதவுகளை நீக்கினார்கள் என்று பதிவிட்டிருந்தார்.நடிகர் ராக்கின் இந்த பதிவை கண்ட சில ரசிகர்கள் நீங்கள் கதவைத் தாண்டி குதித்து uber-ஐ அழைத்து படப்பிடிப்புக்கு சென்று இருக்கலாமா என்று கேலி செய்தார்கள்.

-விளம்பரம்-

அதற்கு மற்றும் ஒரு பதிவை வெளியிட்டுள்ள ராக் அடுத்த முறை வேண்டுமானாலும் நான் கதவை எகிறி குதித்து uber-ஐ அழைத்து செல்கிறேன். ஆனால் இந்த முறை என்னால அப்படி செய்ய முடியவில்லை. எனக்காக படக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற நினைப்பில் நான் இப்படி செய்தேன் என்று கூறியிருக்கிறார்

Advertisement