அவர்கள் இருவர் மத்தியில் ப்பொறி எரிந்து கொண்டுதான் இருக்கிறது – ரஜினி குறித்து ஒய் ஜி மகேந்திரன்

0
1037
- Advertisement -

ரஜினியின் ஆன்மீகம் குறித்து ஒய் ஜி மகேந்திரன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது ரஜினியின் நடிப்பில் வெளியாகி இருந்த படம் “ஜெயிலர்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் கிருஷ்னன், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஷாக்கி, மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை ஜெயிலர் படம் 525 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதோடு செப்டம்பர் மாதம் இந்த படம் netflix மற்றும் சன் நெஸ்ட் என இரண்டு தளத்திலும் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

ரஜினி ஆன்மீகம்:

மேலும் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலை உட்பட பல இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றிருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. அப்போது அவர் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவரிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருந்தார். இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சை எழுந்தது. இதற்கு சிலர் ரஜினிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பேசியிருந்தார்கள்.

இதனை அடுத்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து விளக்கம் கொடுத்திருந்தார். இதனை அடுத்து ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவை சிறப்பாக ரஜினிகாந்த் கொண்டாடி இருந்தார். பின் சில தினங்களுக்கு முன்பு தான் ரஜினிகாந்த் பெங்களூரில் தான் வேலை செய்த பஸ் டிப்போவிற்கு சென்று சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இருந்தது. இப்படி ரஜினி குறித்து ஏதாவது ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வந்து கொண்டு தான் இருக்கிறது.

-விளம்பரம்-

ஒய் ஜி மகேந்திரன் பேட்டி:

இந்த நிலையில் ரஜினி குறித்து நடிகர் ஒய் ஜி மகேந்திரன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், எனக்கு இப்போது 73 வயதாகிறது. நான் ரஜினி உடன் ஆறு, ஏழு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். இதை பார்க்கும்போது பலரும் எப்படி இப்படி ஓடுகீறிர்கள் என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம் என்னையே இப்படி சொல்கிறீர்களே கமல்ஹாசன் ரஜினிகாந்த்தை இன்று சினிமா உலகம் அடையாளமாக வைத்து பேசுகிறது.

ரஜினி ஆன்மீகம் குறித்து சொன்னது:

இங்கு வயது வித்தியாசம் ஒரு விஷயமே கிடையாது. அவர்கள் இருவருக்குள்ளும் இன்னும் அந்த இளமை தீப்பொறி எரிந்து கொண்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால், இன்னும் அவர்களுக்கு மத்தியில் கடுமையான போட்டி நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. அதேபோல் ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீகத்தில் இப்போது ஈடுபடவில்லை. அவர் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆன்மீகம் முக்தி அடைவதற்கான வழி என்பதை அவர் நம்புகிறார். அதற்கான இடத்தை நாம் கொடுத்துதான் ஆக வேண்டும். அவர் இதை செய்கிறாரா? இதை செய்கிறாரா? என்று அது தொடர்பாக எந்த கேள்வியும் கேட்க எவனுக்கும் அருகதை கிடையாது. அவரை மட்டும் இல்ல என்னையே இங்கு யாரும் கேள்வி கேட்க அனுமதி கிடையாது என்று பேசி இருக்கிறார்.

Advertisement