மாத்திரை போட்டுகொண்டு உறக்கம், கையில் இருந்த சிகரெட்டால் வந்த வினை,தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய மனைவி. ஆனந்த்பாபுவை பற்றி அறியாத பக்கம்.

0
1305
Anandbabu
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நம் வலைதளத்தில் நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த் பாபு குறித்து பதிவு ஒன்றை போட்டிருந்தோம். அந்த பதிவில் ஆனந்த் பாபுவின் குடும்ப வாழ்க்கை மற்றும் அவரது பிள்ளைகள் குறித்தும் பதிவிட்டு இருந்தோம். அந்த பதிவு வைரலான நிலையில் நடிகர் ஆனந்த் பாபுவின் மகன் பார்வைக்கு அந்த பதிவு தென்பட, அந்த பதிவில் இருந்த சில தகவல்கள் தவறாக குறிப்பிடபட்டுள்ளது என்பதை மிகவும் தன்மையோடும் நாகரீகத்தோடும் நம்மிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து நாம் அவரை தொடர்பு கொண்டு பேசிய போது, அவரிடம் இருந்து ஏகப்பட்ட வியப்பான தகவல்களும் பல அதிர்ச்சியான உண்மைகளும் கிடைக்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனந்த் பாபுவின் மூத்த மகனான பிஜேஷ் நாகேஷ், தன் பெயரிலேயே தாத்தாவின் பெயரை கொண்டவர். அதே போல இவர் முதல் பேரன் என்பதால் நாகேஷின் செல்லப் பிள்ளையாக இருந்துள்ளார். இதனாலேயே இவர் தன் தாத்தா நாகேஷ் முதல் தான் பேசத் துவங்கினர். என் தாத்தா, தாராபுரத்தில் இருந்து வந்தவர், மேலும், மிகவும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர் தான். அவர் யாருடைய உதவியும் இல்லாமல் தான் அவர் சினிமாவில் நுழைந்தார். அப்போது இருந்த காலகட்டத்தில் எம் ஆர் துவங்கி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வரை அனைவருமே நல்ல தோற்றம், வசீகர முகம் என்று தான் இருந்தனர்.

- Advertisement -

ஆனால், அவர்களை எல்லாம் ஒப்பிடும் போது தாத்தா கொஞ்சம் கம்மி தான் என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அவர் சினிமாவில் நிலைத்ததற்கு காரணம் அவரின் திறமை தான் அவரின் இன்ஸ்பிரேஷனில் ஒருவர் அமெரிக்க காமெடி நடிகர் Jerry Lewis தான். அவரின் மேனரிசம் தான் அவர் பாலோ பண்ணார். அதன் பின்னர் இந்திய நடிகர் மிதுன் சக்ரபோர்த்தியின் ஸ்டைலை பார்த்து அதனை தமிழ் சினிமாவில் தன்னுடைய ஸ்டாலில் கொடுதார் தாத்தா என்று தன் தாத்தா குறித்து பேசி முடித்த பின் தன் தந்தை குறித்து பேச ஆரம்பித்தார் பிஜேஷ். என் அப்பாவிற்கு Gene Kelly ஒரு இன்ஸபிரேஷன். அவரை பார்த்து தான் என் அப்பா டான்ஸ் ஸ்டெப்புகளை போட ஆரம்பித்தார்.

டிஸ்க்கோ என்றாலே தமிழ் சினிமாவில் 1,2,3 என்று ஒரே அசைவை மட்டும் தான் அது வரை பார்த்து இருந்தனர். ஆனால், தாத்தாவிற்கு பின் அந்த கண்ணோட்டத்தை மாற்றியது அப்பா தான். பிரபு தேவாவிற்கே அப்பா தான் இன்பிரேஷன். அப்பா பிறக்கும் போதே மிகவும் வசதியான குடும்பத்தில் தான் பிறந்தனர். ஆங்கிலத்தில் சொன்னால் ‘Born with silver Spoon’ தான் என் அப்பா. அப்பா நடனம் மட்டும் தான் ஆடுவார் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் செமயா ஸ்கிப்பிங் ஆடுவர். அதுவும் ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டே அதில் நடனமும் செய்வார். அது மட்டுமல்லாமல் அவருக்கு பியானோ வசிக்கத் தெரியும். அவர் ஒரு சிறந்த டென்னிஸ் பிளேயர். அதுவும் ஒரு கைதேர்ந்த வீரர் போல டென்னீஸை விளையாடுவார். ஆனால், அவருக்கு ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், வாழ்க்கை அவரை சினிமாவிற்கு கொண்டு சென்று வந்தது.

-விளம்பரம்-

இப்படியே சென்று கொண்டு இருக்க அவருக்கு கல்யாண பேச்சு அடிபட்டது. தாத்தா மிகுந்த தெய்வ பக்தி கொண்டவர். என் பாட்டி கிரிஸ்துவர் என்றாலும் தாத்தா இந்து கடவுளை தான் வழிபட்டு வந்தார். இதனாலேயே சாஸ்திர ஜோதிடத்தில் தாத்தாவுக்கு அதீத நம்பிக்கை. சொல்லப்போனால் ஜாதக பொருத்தத்தை பார்த்து தான் என் அப்பாவிற்கு கல்யாணமே நடந்தது. என் அம்மா சாந்தி, அவருடைய உண்மையான பெயர் Maria Patricia Shanthi அவர் ஒரு தத்து மகள். அவரை ஹைதராபாத்தில் இருந்த அலகை சாமி என்ற ஒரு கிறிஸ்துவ குடும்பத்தில் தத்தெடுத்து வளர்க்கப்பட்டார். அவர்கள் கத்தோலிக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதனாலேயே அவரை பொத்தி பொத்தி வளர்த்தனர். என் அம்மாவிற்கும் வெளியுலகம் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது.

சொல்லப்போனால் என் தாத்தா என் அப்பாவிற்காக பெண் கேட்க சென்ற போது என் அம்மாவிற்கும் ஏற்கனவே வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்துவிட்டது. ஆனால், என் தாத்தா தான் இருவருக்கும் ஜாதம் நன்றாக பொருந்தி இருக்கிறது என்று அவர்களை கஷ்டப்பட்டு சமாதானம் செய்தார். இருந்தாலும் என் அம்மாவோ, என்னை வளர்த்தது என் அம்மா அப்பா தான் அவர்கள் யாரை சொல்கிறார்களோ அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லிட்டார். அப்புறம் எப்படியே என் அம்மாவிற்கும் என் அப்பாவிற்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் அப்பா கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார் . அவர்களுக்கு நான்கு பிள்ளைகளாக நாங்கள் பிறந்தோம். நான் மூத்தவன், இளையவன் கஜீஷ் அவனும் நடிகன் தான். மற்ற ரெண்டு பேர் வேறு துறையில் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் என் அப்பா கிறிஸ்துவ மதத்திற்கும் மாறினார். நன்றாக தான் சென்று கொண்டு இருந்தது.

என் அப்பாவிற்கு மிகவும் இளகிய மனசு, யாராவது உதவி என்று கேட்டால் தட்டாமல் செய்துவிடுவார். அவர் தன்னுடன் பழகிவர்களை எளிதாக நம்பிவிடுவார். அவரது வெகுளி தனத்தை பயன்படுத்தி அவரை பலர் தங்கள் சுய லாபத்திற்கு பயன்படுத்தி இருக்கின்றனர். அப்படி நம்பி தான் ஒருவரிடம் அணைத்து பணத்தையும் இழந்துவிட்டார். இடையில் நாங்கள் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டோம். அப்போது நாங்கள் குழந்தைகள் தான்.அப்போதெல்லாம் என் அம்மா தான் குடும்பத்தை இழுத்து பிடித்து காப்பாற்றினார்.ஆனாலும் அப்பாவின் சேரக்கூடாத சேர்க்கையாலும் சில போலியான நண்பர்கள் வட்டாரத்தாலும் அவர் மிகவும் மோசமான நிலைக்கு சென்றார் குடிப்பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு இருந்த சிகெரட் பழக்கமும் அதனால் அதிகமானது. இதனால் அம்மா அப்பா இருவருக்கும் அடிக்கடி சில பிரச்சனைகள் எழும். இது எல்லார் வீட்டிலும் எழும் பிரச்சனை போல தான் சாதாரணமாக இருந்தது.

சண்டை வரும் போதெல்லாம் அப்பாவும் அடிக்கடி நண்பர்களை பார்க்கப்போகிறேன் என்று சென்றுவிடுவார். அப்படி எதார்த்தமாக நண்பர்களுடன் போய் பொண்டாட்டி கிட்ட சண்ட போட்டு வந்துட்டேன் என்று சொன்னதை தான் ஊதி ஊதி பெருசாக்கி ரெண்டு பேரும் விவகாரத்து பண்ணிட்டாங்கன்ற அளவுக்கு கிளம்பிடிச்சு. ஆனால், உண்மையில் இவர்கள் எப்போதும் பிரிந்தது இல்லை. சில பிரச்சனை காரணமாக அவருக்கும் தனிமை தேவைபட்டது அதனால் அப்பா தனியா அவர் பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.

மேலும், ஆனந்த் பாபுவிற்கு தீ விபத்து ஏற்பட்டது குறித்து நாம் கேட்ட போது , அப்பாவிற்கும் நண்பர்கள் செய்த துரோகத்தால் அவருக்கும் யாரை நம்புவது என்றே தெரியவில்லை. சினிமா வட்டாரத்திலும் அவருக்கும் பெரிதாக நண்பர்கள் கிடையாது. அப்படி இருந்தவர்களும் அவரை முடிந்த வரை பயன்படுத்திக்கொண்டு பின்னர் கை கழுவி விட்டுவிட்டனர். இதனால் யாரை நம்புவது என்ன செய்வது என்று தெரியாமல் அப்பாவுக்கும் இடையில் மிகவும் மன அழுத்தம் ஏற்பட்டுவிட்டது. அதனால் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டார். அப்போது அவர் தூக்க மாத்திரை போட ஆரம்பித்துவிட்டார். அப்படி ஒரு முறை தூக்க மாத்திரை போட்டுகொண்டு தூங்க முற்பட்ட போது அவருக்கு இருந்த டெங்ஷனில் தூக்கம் வரவில்லை. இதனால் படுக்கையில் சாய்ந்தவாரு புகைபிடித்துக்கொண்டு இருந்துள்ளார். தூக்க மாத்திரை போட்டுகொண்டு இருந்ததால் அப்படியே தூங்கி இருக்கிறார்.

அந்த சிகெரெட் நெருப்பு பெட்டில் பரவி தீப்பிடிக்க ஆரம்பித்து உள்ளது. ஆனால், அவர் மயக்கத்தில் இருந்து தெளியாமல் அப்படியே அந்த தீயில் இருந்துள்ளார். பின்னர் எதோ வாசனை வருகிறது என்று என் அம்மா தான் சென்று பார்த்து தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அன்று என் அம்மா இல்லை என்றால் என் அப்பா இருந்திருக்க மாட்டார். அப்போதுதான் புரிந்தது. என் தாத்தா ஜாதகம் பார்த்து என் அம்மாவை கல்யாணம் செய்து வைத்ததன் பலன். என் அம்மா தான் என் அப்பாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார்.

இப்படியே பல வருஷம் போயிடுச்சி, அப்போ எதோ ஒரு கோவில் கும்பாபிஷேகத்துக்கு என் அப்பா போயிட்டு வந்தார். அப்போது யாரோ அவரிடம், உன் அப்பா இந்துவாக தான இருந்தார் அதனால் நீ மீண்டும் இந்துவாக இரு என்று சொன்னதால் அவர் மீண்டும் இந்துவாக மாறிவிட்டார். ஆனால், அது தான் என் அம்மா அப்பாவிற்கும் கொஞ்சம் பிரச்சனையை ஏற்படுத்தியது. என் அம்மாவிற்கு என் அப்பா இந்துவாக மாறியது பிரச்சனை இல்லை. சொல்லப்போனால் அப்பாவின் சகோதரர்களான ரமேஷ் பாபு இஸ்லாம் மதத்திற்கு மாறி அதை பின்பற்றி வருகிறார். இன்னோரு சகோதரர் ராஜேஷ் பாபு பிராமினாகவே இருந்து வருகிறார். அதனால் எங்கள் குடும்பத்தில் இந்து முஸ்லிம் கிறிஸ்டீன் என்று மூன்று மாதங்களுக்கு எந்த ஒரு பேதமும் கிடையாது. அதனால் அப்பா மீண்டும் இந்துவாக மாறியது அம்மாவிற்கு பிரச்சனை கிடையாது. கிறிஸ்துவராக 25 வருடம் இருந்துவிட்டு இப்போ மீண்டும் இந்துவாக மாற காரணம் என்ன ? (இது ஒருவருடன் வாழ்ந்த ஒரு மனைவியின் நியாயமான கேள்வி தானே )இன்னமும் யாரோ ஒருவரின் பேச்சை கேட்டு தான் அவர் நடக்கிறார். அவர் இப்படி மதம் மாறுவதைவிட அவர் மாற வேண்டும் என்பது தான் என் அம்மாவின் கேள்வியே. இருப்பினும் அம்மா அப்பா இருவரும் நன்றாக பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

பல கஷ்டங்கள் மற்றும் மன அழுத்தங்களை எல்லாம் கடந்து அப்பா மீண்டும் நடிக்கத் துவங்கினார். மேலும், அவர் இப்போதெல்லாம் புகைபிடிப்பதையும், குடிப் பழக்கத்தையும் ரொம்பவே குறைச்சிட்டார். சீரியல்கள், படங்கள் என்று மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். விரைவில் நீங்கள் ரசித்த அதே பழைய ஆனந்த் பாபுவாக அவர் மீண்டும் வருவார் என்று நான் உறுதியாக சொல்கிறேன் என்று முடித்தார் பிஜேஷ். மேலும், அவர் நம்மிடம் சில பிரத்யேக புகைப்படங்களையும் பகிர்ந்துகொண்டார்.

Advertisement