பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் ஆரவ், ரைசா, ஹரிஷ் கல்யாண், ஜூலி ஆகியோர் நடிகர்களாக மாறிவிட்டனர். அதே போல இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாமல் இருந்த யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
தற்போது யோகி பாபு நடித்துள்ள ‘ஜாம்பி ‘ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது யோகி பாபு ‘தர்மபிரபு’ என்ற புதிய படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார். இந்த படத்தை இயக்குநர் முத்துகுமரன் இயக்குகிறார்.
இந்த நிலையில் ஜாம்பி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. தற்போது யாஷிகா இந்த படத்தில் தான் ஒரு மருத்துவராக நடிக்க போவதாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
மேலும், இந்த படத்தில் அவர் இந்த படத்தில் அவருக்கு இருக்கும் கதாபாத்திரத்தின் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். தற்போது அந்த புகைப்படத்தை கிண்டல் செய்து நெட்டிசன்கள் கிழித்தெடுத்து வருகின்றனர்.