ஐ லவ் யூ.! நீ என்ன மிஸ் பண்ணலயா.! நான் ரொம்ப தனிமையா இருகேன்.! மீண்டும் புலம்பிய யாஷிகா.!

0
596
Yashika

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் எப்படி ஓவியா பிரபலமோ அந்த அளவிற்கு இரண்டாவது சீசனில் பிரபலம் அடைந்தார் நடிகை யாஷிகா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் மஹத்துடன் காதலில் விழுந்தது நாம் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் நேற்று (8-1-19) propose day அதாவது நமக்கு விருப்பமானவர்களுக்கு காதலை சொல்லும் சொல்லும் நாளை முன்னிட்டு நடிகை யாஷிகா தனது நெருங்கிய தோழியான ஐஸ்வர்யாவிற்கு ஐ லவ் யூ சொல்லியுள்ளார் யாஷிகா. மேலும், நீ என்ன மிஸ் பண்ணலயா, நான் மிகவும் தனிமையாக இருக்கிறேன் என்று புலம்பியுள்ளார் யாஷிகா.

- Advertisement -

அதற்கு ஐஸ்வர்யா கண்டிப்பாக நானும் உன்னை மிஸ் செய்கிறேன். ஐ லவ் யூ விரைவில் நாம் இருவரும் ஒன்றாக இருப்போம் என்று யாஷிகாவிடம் கூறியுள்ளார். இந்த உரையாடலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் யாஷிகா.

யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் நண்பர்களாக ஆனார்கள். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இருவரும் இணைபிரியாத தோழிகளாக மாறி விட்டார்கள். அதனை நிரூபிக்கும் வகையில் அடிக்கடி இதுபோன்று அன்பை பரிமாறிக்கொள்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement